தமிழக ஆளுநர் செயல்.. ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.. மீண்டும் எச்சரிக்கும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வரம்பிற்குள் நடந்து கொள்ள வேண்டும், தமிழக ஆளுநர் அவ்வாறு நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவங்கள் வருந்தத்தக்கது என்றும் சசிகலா அரசியலுக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
என்றும் புதுக்கோட்டையில் செய்தியார்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்பி கூறினார.

1970 ஆம் ஆண்டு நடந்த வங்கதேச போரின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பங்களாதேஷ் போரின்போது ராணுவத்தில் பணிபுரிந்து போரில் கலந்துகொண்ட 2 ராணுவ வீரர்கள் உட்பட 10 ராணுவ வீரர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்

உகந்தது அல்ல

உகந்தது அல்ல

இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருநாவுக்கரசர் , "ஆளுநர்களுக்கு என்று உள்ள அதிகாரங்களை தாண்டி செயல்படுவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இந்தியாவின் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

மிரட்டல்

மிரட்டல்

பாரதிய ஜனதாவுக்கு ஒத்துவராத மாநில அரசுகளை ஆளுநர்களை பயன்படுத்தி அரசுகளை கலைப்பது மிரட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது . இது சட்டத்துக்கு புறம்பானது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி பல அரசுப் பணிகளை இருந்துள்ளார் எனவே அவர் தங்களுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள்

தமிழக முதல்வர்

தமிழக முதல்வர்


வீடு தேடி கல்வி திட்டம் தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்துள்ளார் ஒரு திட்டம் தொடங்கும்போதே அதற்கு எதிர்மறையான கருத்து கூறுவது தவறானது. அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் தமிழக முதல்வரிடம் எடுத்துச் சொன்னால் அதை அவர் மாற்றி திட்டத்தை செயல்படுத்துவார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயக ரீதியாக தான் தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது திட்டத்தில் குறைபாடு சாதக பாதகங்கள் இருந்தால் உடனடியாக அதனை முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டினால் அதை தமிழக முதல்வர் கட்டாயம் சீர் செய்வார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடக்கத்திலிருந்தே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கூறிய கருத்து தான் தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பாக உள்ளது. உண்மை கண்டிப்பாக வெளிச்சத்திற்கு வரும் குற்றம் செய்த அரசு தண்டிக்கப்படும் உச்சநீதிமன்றத்தால் மக்களால் என்ற நம்பிக்கை உள்ளது.

வருத்தம்

வருத்தம்

அதிமுக தொடக்க காலத்திலிருந்து நான் அதிமுகவில் இருந்து எம்ஜிஆரிடம் பணியாற்றியுள்ளேன் ஜெயலலிதாவிடம் பணியாற்றியுள்ளேன் என்னால் அதிமுகவில் கொண்டு வரப்பட்டவர்கள் அதிகம். அதன் அடிப்படையில் பார்க்கும்போது அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் சம்பவம் மிகவும் வருத்தத்தை தருகிறது. அதற்குமேல் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அரசியல்

அரசியல்

89 இல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவும் தற்போது ஏற்பட்டுள்ள பிலவும் ஒன்றா என்பதை காலம்தான் நிர்ணயிக்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சி என்பது வேறு, ஜெயலலிதா ஆட்சி என்பது வேறு, இபிஎஸ் ஆட்சி என்பது வேறு, ஓபிஎஸ் ஆட்சி என்பது வேறு. நாளும் நான்கு விதமான ஆட்சி. தற்போது ஸ்டாலின் ஆட்சி என்பது முற்றிலும் வேறுபட்ட ஆட்சி மாறுபட்ட ஆட்சி சிறந்த ஆட்சி. சசிகலா அரசியலுக்கு வருவதால் மாற்றம் ஏற்படுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+