ஆளுநர் ஆர்.என் ரவி இன்று டெல்லி பயணம்.. மேலிடத்தில் சொல்லப்போகும் தகவல்கள் என்ன?
தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த தகவல்களை பேசுவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்கிறார்.
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் செய்கிறார். தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து மேலிடத்திற்கு விவரிப்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரையில் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் 200 போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆளுநருக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அனுப்பியிருக்கும் புகார்க் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக அரசு பல எதிர்ப்பு நிலையை எடுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்களுக்கு திமுக அரசு பல நேரங்களில் எதிர்வினையாற்றி வருகிறது. சனாதனம் பற்றி பேச்சுக்கும், திராவிடம் குறித்த பேச்சுக்கும் திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்தும் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை அனுப்பியுள்ள புகாரில், தமிழ்நாடு உளவுத்துறை தலைவராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம் 2018ஆம் ஆண்டில் மதுரை மாநகர கமிஷனராகப் பொறுப்பேற்றார். 13 மாதங்களுக்குப் பிறகு திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்ற ஒருவரின் பாஸ்போர்ட் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல போலி பாஸ்போர்ட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவையெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் மதுரையில் பெறப்பட்ட பாஸ்போர்ட்டுகள் என்பது தெரியவந்து, வழக்கு பதிவுசெய்து க்யூ பிரிவு போலீஸ் இந்த விவகாரத்தை விசாரித்தது.
க்யூ பிரிவு விசாரணையில் போலி பாஸ்போர்ட் வழங்கியதில் மதுரை மாநகர காவல்துறை அதிகாரிகள், பாஸ்போர்ட் அதிகாரிகள், தபால்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
Recommended Video
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, இந்த வழக்கில் 175 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் 22 பேர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதாகவும், காவல்துறையைச் சேர்ந்த மூன்று பேர், பாஸ்போர்ட் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேர் கைதுசெய்யப்பட்டதாக'வும் 2021, ஜனவரியில் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பாஸ்போர்ட், தபால்துறை அதிகாரிகளை விசாரிக்கக் கடிதம் அனுப்பிய அப்போதைய க்யூ பிரிவி டி.ஐ.ஜி ஈஸ்வரமூர்த்தி, அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் இளவரசு, ஐ.எஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், ஐ.எஸ் உதவி ஆணையர் சிவகுமார், மதுரை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று அப்போது டி.ஜி.பிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால், தமிழ்நாடு அரசு அனுமதி தரவில்லை. அவனியாபுரத்தில் இருந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முக்கியமான இந்த வழக்கில் விசாரணை நடக்கவில்லை. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதத்தால் வழக்கு விசாரணை தாமதம் செய்யப்படுகிறது.
தமிழக ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார். பயணம். தமிழக உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த தகவல்களை மேலிடத்தில் விவரிக்கவிருப்பதாகத் தெரிகிறது. மேலும், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும் விவரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த போலி பாஸ்போர்ட் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று ஆளுநருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. மேலும் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் அனுப்பவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தனது டெல்லி பயணத்தின் போது பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications