தெரிந்தது பிறை.. நாளை முதல் தொடங்குகிறது புனித ரமலான் நோன்பு.. தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு
சென்னை : பிறை தெரிந்ததையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும்.
இதையடுத்து 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

ரம்ஜான் நோன்பு
அந்த வகையில், வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது . இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு பண்டிகை நாளை முதல் கடைபிடிக்கப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

பிறை தெரிந்தது
இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. இன்று மாலை பிறை தென்பட்டதாக தலைமை காஜி அறிவித்திருந்தார்.

நாளை முதல் நோன்பு
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இதனையடுத்து அதிகாலை தொடங்கும் நோன்பு கடைபிடிக்கும் மக்கள் மாலை தொழுகைக்கு பிறகு நோன்பை முடித்துக் கொள்வர். குறிப்பாக தராவீஹ் எனும் இரவு நேர சிறப்பு தொலுகை நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்படும்.

சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகள் சிறப்பு தொழுகைக்கு அனுமதியளிக்கப்படாத நிலையில் , இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பள்ளி வாசல்கள் அலங்கரிப்பட்டுள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications