Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடிந்தால் ரூ.6000 நிவாரணம்.. "ரூ10000 கொடுங்க.. தமிழகத்தில் "பொலிடிக்கல் இம்மெச்சூரிட்டி": அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது 10,000 ரூபாய் வழங்க வேண்டும்" என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அத்துடன் திமுக அரசையும் மீண்டும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

சென்னையில், மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில், கடந்த வாரம் முழுவதும் நேரடி ஆய்வை மேற்கொண்டிருந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.. முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, வாட்டர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி, பால் பாக்கெட்டுகள், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.

tamil nadu govt should give Minimum rs10000 as Chennai flood relief, says TN BJP Leader Annamalai

அத்துடன் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடம், "எப்பவுமே இங்கே இப்படித்தான் தண்ணீர் தேங்குமா? திமுக அரசு உங்களுக்கு உதவிகளை செய்ததா? அரசின் நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கிறதா? உங்களை மீட்க கவுன்சிலர் வந்தாரா? உங்களை வந்து பார்த்தாரா? என்றெல்லாம் விசாரித்தபடியே இருந்தார்.

விசாரணை: இதுபோல, வெள்ள நீரில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பகுதி மக்களையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கு உதவிகளையும் செய்து, அவர்களிடமும் இதே கேள்விகளை கேட்டு வந்தார் அண்ணாமலை..

பாதிக்கப்பட்ட மக்கள் சொல்லும் கருத்துக்கள், தங்கள் தொகுதி குறித்து அவர்கள் சொல்லும் குறைகள் உள்ளிட்ட அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்து கொண்டாராம். இதைவைத்தே திமுக அரசை கேள்வி எழுப்புவதுடன், மொத்த குற்றச்சாட்டையும், அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நாளை முதல்: அதுமட்டுமல்ல, வெள்ள நிவாரணமாக மக்களுக்குக் குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியபடியே உள்ளார். நாளைய தினம் 6000 ரூபாய் நிவாரணம் வழங்க உள்ள நிலையில், இன்றும் இதே கோரிக்கையை அண்ணாமலை விடுத்திருக்கிறார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது அண்ணாமலை சொன்னதாவது: மத்திய அரசின் அதிகாரிகள், மாநில அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள். அது ஒரு மாண்பு. தமிழகத்தில் திமுக செயல் இழந்து நிற்கிறது. பேரிடரை மோசமாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு சார்பில் வந்த 4 அதிகாரிகள் கொடுத்த சான்றிதழை அறிக்கையாக தந்திருக்கிறார்கள்.

நிவாரணம்: திமுக அரசு பேரிடர் காலத்தை மோசமாகக் கையாண்டதை முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும். பொலிடிக்கல் இம்மெச்சூரிட்டியை தமிழகத்தில் முதன்முறையாக பார்க்கிறேன். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி நிச்சயமாக வந்துசேரும்.

10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக தர வேண்டும் என்கிறோம். ஆனால், முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினோ, "நாங்கள் என்ன உங்க அப்பா வீட்டு பணத்தையா கேட்கிறோம், டெல்லியிலிருந்துதானே கேட்கிறோம்" என்கிறார். வெள்ள நிவாரணம் வழங்கப்படும் மாநில பேரிடர் மீட்பு நிதியத்திற்கு 75 சதவீத பங்களிப்பை மத்திய அரசு ஏற்கனவே தந்திருக்கிறது. அதனால், இது டெல்லியிலிருந்து வந்த பணம்தான்...

பொய் சொல்ல மாட்டோம்: இதையெல்லாம் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளாமல் விமர்சனமாக பேசுகிறார்கள்... அதனால்தான் சொல்கிறேன், மத்திய மத்திய அரசின் பங்களிப்புடன் மாநில அரசும் தன்னுடைய பங்களிப்பாக வெள்ள நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்

ஊடகம், காட்சிகள் பொய் சொல்லாது, மக்களுடைய பேட்டி பொய் சொல்லாது. 5 நாட்களாக தண்ணீரிலிருந்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். நாங்களும் பொய் சொல்ல மாட்டோம். பாஜகவை விட பழமையான கட்சி திமுக. ஆனால், மன்னர் தேரில் செல்வது போல் திமுகவில் உள்ளவர்கள் பேரிடரில் மக்களைக் காண சென்றார்கள்.

திமுக அரசு பாஜகவைக் குறை சொல்கிறதென்றால் நாங்கள் வளர்ந்து விட்டோம் என்றே அர்த்தம். மக்களுக்கு தேவையான இடங்களில் நாங்கள் நிற்கின்றோம் என்று அர்த்தம். குறை சொல்வது அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வேலை கிடையாது. அதிகாரிகள் அரசியல் பேசக் கூடாது. அதிகாரிகளின் கருத்துடன் நான் உடன்படவில்லை.

ராஜ்நாத் சிங் அமைச்சரோ, பிரதமரோ அரசியல் பேச மாட்டார்கள். எந்த மாநிலத்தையும் அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், திமுக கோட்டை விட்டதை மறைக்க முடியாது. சேதத்தைக் கணக்கிடுவதற்கு மட்டுமே அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்தனர். ஆனால், முழு சேதத்தை அவர்கள் இன்னும் கணக்கிடவில்லை" என்றார் அண்ணாமலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+