வெள்ளை அறிக்கை கேட்ட எல்.முருகனுக்கு.. வெள்ளை பேப்பரில்.. அமைச்சர் மா.சு. பொளேர் பதிலடி
சென்னை : தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன் என்றும் இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அண்மையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அரசு கொடுத்த தடுப்பூசி விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்று கூறியுள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

தடுப்பூசி வீணடிப்பு
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்,முருகன், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும் உள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் தமிழகம் வீணடிப்பதைத் தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் எனப் பிரதமர் எங்களிடம் அறிவுறுத்தினார் என்றார்.

வெள்ளை அறிக்கை
இதேபோல் இன்னொரு பேட்டியில் எல் முருகன், மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மாநில அரசு எவ்வளவு பயன்படுத்தியது மற்றும் வீணடித்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

எத்தனை கோடி தடுப்பூசி
இதற்கு கடந்த வாரமே பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகள் எவ்வளவு, எவ்வளவு பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு இருப்பில் இருக்கிறது என்ற புள்ளி விவரத்தை தெரிவித்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசியை பொறுத்தவரை மொத்தம் 35 கோடி பேருக்கு போடப்பட்டதாக மத்திய அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் அளவு 1கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550 ஆகும்.

ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த 21ம் தேதியில் இருந்து இந்தியாவில் தயாராகிற ஒட்டுமொத்த தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை அவர்களே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து விநியோகம் செய்வோம் என்று சொன்னார்கள். அந்த வகையில் ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் வயிலாகவும், நேரடியாகவும் சென்று தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். திமுக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுவின் தலைவர் டிஆர் பாலுவிடமும் மத்திய அமைச்சரவை சந்தித்து தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொன்னார்கள். என்னையும் டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காக கோரிக்கை வைக்க சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 9ம் தேதி டெல்லிக்கு சென்று தடுப்பூசிக்காகவும் எய்ம்ஸ் மருத்துவனை தொடர்பாகவும் நான் வலியுறுத்த உள்ளேன்.

வெள்ளை அறிக்கை
தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன். இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன் என்றார். தடுப்பூசி வீணடிப்பு குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர்,. ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை எனறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications