ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக அறுவடை...விடிய விடிய வெற்றியைக் கொண்டாடிய உடன்பிறப்புகள்
ஊராக உள்ளாட்சித்தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றியை பெற்றுள்ளனர். விடிய விடிய வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம்: ஊரக தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது வெற்றிகள் தெரியவந்த உடன் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது.138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது, 74 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

காலை முதல் பரபரப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. 9 மாவட்டங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர். 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 136 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. 5 இடங்களில் மட்டுமே அதிமுக முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து முன்னிலை
1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 929 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. அதிமுக 132 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 122 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் திமுக 83, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் 1, விசிக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிக்களிப்பில் திமுகவினர்
5 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிகள் முழுவதையும் திமுக கைப்பற்றியது. விழுப்புரம் மாவட்டத்தில் திமுக 27 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. அதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11இடங்களையும்,கள்ளக்குறிச்சியில் திமுக 19 இடங்களையும் மொத்தமாக அள்ளியது. வேலூரில் மொத்தமாக 14 இடங்களையும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 இடங்களையும் திமுக அள்ளியுள்ளது. அதிமுக 1 இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.

அமோக அறுவடை
திருநெல்வேலியில் 12 இடத்தையும், தென்காசியில் 14 இடங்களையும்,ராணிப்பேட்டையில் 13 இடங்களையும் கொத்தாக கைப்பற்றியுள்ளது திமுக. திருப்பத்தூரில் மொத்தமுள்ள 13 இடங்களில் 10 இடங்களில் திமுக வென்றுள்ளது. விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன. கட்சி முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தின் வாசலில் கண் விழித்து காத்திருந்தனர். அமோக வெற்றியை திமுகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications