தமிழ்நாடு- இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ரத்து?டிக்கெட் கட்டணம் திருப்பித் தர முடிவு?
சென்னை: தமிழ்நாடு- இலங்கை இடையேயான (நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம்) இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கப்பல் போக்குவரத்துக்கான முன்பதிவு செய்யக் கூடிய https://sailindsri.com/ இணையதளத்தில், தொழில்நுட்ப கோளாறு மற்றும் வானிலை மாறுபாடுகளால் நாகப்பட்டினம்- யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் சேவை தாமதமாகும் என்றும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வரவழைக்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனையடுத்து ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை துறைமுகம் இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த கப்பல் பயணத்துக்கான டிக்கெட்டுகளை https://sailindsri.com/ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று https://sailindsri.com/ இணையப் பக்கத்தில், நாகப்பட்டினம்- யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் போக்குவரத்து தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் வானிலை மாறுபாடுகளால் இந்த கப்பல் சேவை தாமதமாகிறது எனவும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் எனவும் https://sailindsri.com/ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல் மூலம் இலங்கை செல்ல திட்டமிட்ட

இந்த குழப்பம் தொடர்பாக விளக்கம் கேட்க https://sailindsri.com/contact-us இணைய தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த 744 886 3535 என்ற தொலைபேசி எண்ணுக்கு நமது ஒன் இந்தியா தமிழ் செய்தி குழுவின் சார்பில் நாம் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் இன்று பகல் 2.30 மணியளவில் இந்த எண்ணை நாம் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் சேவை குறித்த விரிவான தகவல்களை பெற முடியவில்லை. https://sailindsri.com/contact-us -த்தை தொடர்பு கொண்டு விரிவாக தகவல்களை நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இடம் பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications