சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 17 பேர் மரணம்.. 22 வயது இளைஞர் உயிரிழப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 8ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 17 பேரில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 286ல் 224 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 15 பேர், திருவள்ளூரில் 14 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 258 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

வீட்டுக்கு அனுப்பாதீங்க.. சீனாவில் செய்ததை சென்னையில் உடனே செய்யுங்கள்.. அன்புமணி அலார்ட்வீட்டுக்கு அனுப்பாதீங்க.. சீனாவில் செய்ததை சென்னையில் உடனே செய்யுங்கள்.. அன்புமணி அலார்ட்

விழுப்புரத்தில் 3 பேர்

விழுப்புரத்தில் 3 பேர்

தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தமே இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லா ஊர்களிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். வேலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 286 பேரில் பலர் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பலர் 50 முதல் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு உடலில் ஏற்கனவே நோய் தொறறு இருந்திருக்கிறது. இந்த நோய் தொற்றுடன் கொரோனாவும் சேர்ந்ததால் மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, சுவாச பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளார்கள்.

சென்னையில் 12பேர் பலி

சென்னையில் 12பேர் பலி

ஜுன் 8ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 17 பேர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 12 பேர் இறந்துள்ளார்கள்.

இளம் வயதில் உயிரிழப்பு

இளம் வயதில் உயிரிழப்பு

தமிழகத்தில் சென்னையை தவிர இன்று திருவள்ளூரில் 2 பேர் காஞ்சிபுரத்தில் ஒருவர், விழுப்புரத்தில் ஒருவர், ராணிப்பேட்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று நிகழ்ந்த மரணங்களில் 14 அரசு மருத்துவமனையிலும், 3 தனியார் மருத்துவமனையில் ஏற்பட்டது. திருவள்ளூரைச் சேர்ந்த 22வயது ஆண் கொரோனாவுக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். நேற்று 20 வயது கர்ப்பிணி பலியான நிலையில் இன்று ஒரு இளம் வயது நபர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 15 பேர் 50 வயதை கடந்தவர்கள்., ஒருவருக்கு 49 வயது ஆகும்.

கொரோனா தீவிரத்தால் மரணம்

கொரோனா தீவிரத்தால் மரணம்

சென்னையில் 79 வயது முதியர், 69வயது மூதாட்டி, 83 வயது முதியவர் , 70 வயது முதியவர், 62 வயது பெண், 55 வயது ஆண், 92 வயது முதியவர், 74 வயது முதியவர், 58 வயது பெண், 49 வயது ஆண், 56 வயது ஆண், 51 வயது ஆண், 55 வயது பெண் உள்பட 12 பேர் இன்றைய நிலவரப்படி உயிரிழந்துள்ளனர். இதுதவிர திருவள்ளூரில் 22 வயது ஆண், காஞ்சிபுரத்தில் 55 வயது ஆண், ராணிப்பேட்டையில் 62 வயது ஆண், விழுப்புரத்தில் 55 பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பலர் வயதானவர்கள் ஆவர். இளம் வயதினரும் அண்மைக்காலமாக கொரோனாவால் பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
tamil nadu: Total number of covid 19 deaths today 17, till now 286. Maximum 224 cases died in chennai due to coronavirus till now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X