சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனி விமானம்.. டெல்லியில் நடக்கும் "அந்த" மீட்டிங்.. மாலையே நேரடி விசிட்.. முதல்வர் ஸ்டாலினின் பிளான

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பிரதமர் மோடியை சந்திக்க செல்ல உள்ள நிலையில், முதல்வரின் பயணத்திட்டத்தில் இடம்பெற்று இருக்கும் முக்கியமான அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Recommended Video

    தனிவிமானத்தில் Delhi செல்லும் Stalin.. பிரதமர் Modi உடன் மீட்டிங்.. இதுதான் திட்டம்

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

    கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

    இதில் அவர் என்னென்ன விஷயங்களை பேச போகிறார் என்பது குறித்து ஏற்கனவே நிறைய தகவல்கள் வெளியாகி இருந்தன. அதில் நீட் தேர்வு ரத்து மற்றும் வேக்சின் ஒதுக்கீடு பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜிஎஸ்டி

    ஜிஎஸ்டி

    அதேபோல் தமிழ்நாட்டிற்கு வரமால் இருக்கும் ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் பேச உள்ளார். எழுவர் விடுதலை, செங்கல்பட்டில் வேக்சின் தயாரிப்பது, கருப்பு பூஞ்சை மருந்து ஒதுக்கீடு போன்ற வேறு சில முக்கிய விஷயங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேச இருக்கிறார்/

    வேறு

    வேறு

    இதெல்லாம் போக முதல்வர் ஸ்டாலினின் பயணத்தில் வேறு சில திட்டங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16ம் தேதி இரவு தனி விமானம் மூலம்தான் டெல்லி செல்கிறார். காலை வரை டெல்லியில் ஓய்வு எடுக்கும் முதல்வர் ஸ்டாலின், காலை 10.30 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ளார்.

    மீட்டிங்

    மீட்டிங்

    அதன்படி டெல்லியில் முக்கியமான மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள இருக்கிறார். டெல்லியில் இருக்கும் சில திமுக தலைவர்களை சந்தித்து தனது அறையிலேயே பேச உள்ளார். தேசிய நிலவரங்கள் குறித்தும், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய வேக்சின் குறித்தும் பேச உள்ளார். இதுவரை முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் யாரையும் சந்திப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை.

    ஆனால்

    ஆனால்

    பிரதமர் மோடியை மட்டுமே சந்திப்பதாக பயண திட்டத்தில் உள்ளது. ஆனால் 17ம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கொரோனா வேக்சின், ஜிஎஸ்டி குறித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இதுபோக அன்று மாலையே முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் திமுக கட்சி அலுவலகத்தை பார்வையிட உள்ளார். டெல்லியில் திமுக அலுவலகம் ஒன்றுர் கட்டப்பட்டு வருகிறது.

    அலுவலகம்

    அலுவலகம்

    கட்சி சார்பாக, டெல்லியில் திமுக பெரிய அலுவலகம் ஒன்றை கட்சி நிதியில் கட்டி வருகிறது. இந்த அலுவலகத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட உள்ளார். அதன்பின் அன்று மாலையே கிளம்பி, இரவு சென்னைக்கு முதல்வர் ஸ்டாலின் வருவார். ஸ்டாலின் இந்த பயணத்தில் பிரதமர் மோடி தவிர வேறு யாரை எல்லாம் சந்திப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Tamilnadu CM M K Stalin will meet some leaders and visit the DMK office construction side in Delhi during his trip to meet PM Modi on June 17.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X