வல்லுனர்கள் தந்த வார்னிங்.. முதல் மீட்டிங்கிலேயே புது ரூட்டை பிடித்த ஸ்டாலின்.. பிளான் தமிழ்நாடு 2.0
சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில்கள், முதலீடுகளை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. ஐடிசி ஹோட்டலில் தற்போது நடக்கும் விழாவில் புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்டு வருகிறார். இயற்கை மின்சாரம் தொடர்பான திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இதில் முன்னுரிமை கொடுத்துள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க காலநிலை மாற்றம் அடைவதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிரேட்டா தன்பெர்க் தொடங்கி பல்வேறு காலநிலை வல்லுனர்கள் வரை உலக வெப்பமயமாதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனி, பெல்ஜியத்தில் ஏற்பட்ட வெள்ளம், வடஇந்தியாவில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல் என்று பல விஷயங்கள் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்டிக் கண்டத்தில் ஏற்படும் மின்னல் தாக்குதல்களும் காலநிலை மாற்றம் காரணமாகவே ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் உலக நாடுகள் பசுமை ஆற்றலை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருகின்றன.

காற்றாலை
காற்றாலை மின்சாரம், இ வாகனங்கள் என்று வளர்ந்த நாடுகள் பல பசுமை ஆற்றல் உற்பத்தி மையங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தியா இன்னும் பசுமை ஆற்றல் உற்பத்தியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு அரசு பசுமை ஆற்றல் உற்பத்தி மையங்கள் மீது கவனத்தை திருப்பி உள்ளது. காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு அரசு முழு கவனத்தை திருப்பி உள்ளது.

தமிழ்நாடு 2.0
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டிலேயே காற்றாலை மின் உற்பத்திக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 28, 664 கோடி ரூபாய் மதிப்பிலான 47 திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்து போடப்படுகிறது. இதனால் 82,400 பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம்
இதில் மொத்தம் 7 திட்டங்கள் காற்றாலை மின்சாரம், பசுமை மின்சாரம் தொடர்பான திட்டங்கள் ஆகும். 5 திட்டங்கள் காற்றாலை தொடர்பாகவும், 2 திட்டங்கள் சூர்ய மின்சாரம் தொடர்பான திட்டங்கள் ஆகும். சென்னை, காஞ்சிபுரத்தை சுற்றி இந்த முதலீடுகள் செய்யப்படுகிறது. eickhoff wind asia, Gurit India Pvt Ltd, Vikram solar , Coral Rewinding India Private Limited போன்ற முன்னணி இயற்கை மின் உற்பத்தி நிறுவனங்கள் இன்று முதலீடுகளை செய்கின்றன.

வேலை வாய்ப்பு
இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இன்று கிட்டத்தட்ட 7 முதல் 8 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்கின்றன. இதன் மூலம் வேலை வாய்ப்பு 10 ஆயிரம் பேருக்கு ஏற்படுத்தப்படும். மொத்தமாக கிரீன் எனர்ஜியை நோக்கி செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு இந்த முறை ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. தமிழ்நாடு அரசு மின் தேவைக்காக இதுவரை தனியார் நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கியது.

அணு
அணுமின் நிலையம், அனல் மின் நிலையங்களை நம்பி இருந்தது. ஆனால் தமிழ்நாடு 2.0 என்ற கூறும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய வகை ஆற்றல் நுட்பங்களை கையில் எடுத்துள்ளது. கால நிலை மாற்றம், மின்சார தேவை என்று பல்வேறு காரணங்களால் தற்போது தமிழ்நாடு அரசு மொத்தமாக புது ரூட்டை பிடித்துள்ளது. கிரீன் எனர்ஜியின் தேவையை உணர்ந்து அரசு தனது முதலீட்டை அதன் பக்கம் திருப்பி உள்ளது.

சந்திப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிற்கான டென்மார்க் தூதுவர் ஃபெரிடி ஸ்வான் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்திப்பு நடத்தினார். தமிழ்நாட்டில் கடலில் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அமைக்கும் முடிவை அரசு அப்போதே எடுத்தது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட உள்ளது. இந்த நிலையில் இந்த மீட்டிங் நடந்து சில வாரங்களில் காற்றாலை மின்சாரம் தொடர்பான முதலீடுகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
6 மாதத்தில் 500% லாபம்.. இந்தியாவில் இப்படியொரு நிறுவனமா.. AI மூலம் பலன் பெற்ற முக்கிய பங்கு 'இது'! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
தங்கம் விலை இனியும் சரியும்.. விடாமல் விலை குறையும்.. ஆனால் அதற்கு பின்புதான் ட்விஸ்ட் இருக்கு! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்











Click it and Unblock the Notifications