சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அறிவு பசிக்கு தீனி.." புகழ்பெற்ற அபுதாபி லூவர் மியூசியத்தை.. வியந்து பார்த்த அரசு பள்ளி மாணவர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: துபாய் சென்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் அங்குள்ள மிகவும் புகழ்பெற்ற லூவர் மியூசியத்தை ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்தார்கள்.

தமிழகத்தில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

அதன்படி வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் படிக்கும் 68 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைத் துபாய்க்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

செம ட்விஸ்ட்.. மோடியை வரவேற்க.. ஒன்றாக நின்ற எடப்பாடி - ஓபிஎஸ்.. மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? செம ட்விஸ்ட்.. மோடியை வரவேற்க.. ஒன்றாக நின்ற எடப்பாடி - ஓபிஎஸ்.. மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?

கல்விச் சுற்றுலா

கல்விச் சுற்றுலா

அதன்படி அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷும் நேற்று விமானம் மூலம் துபாய் சென்றடைந்தனர். இதனிடையே இன்று மாணவர்கள் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்து வருகின்றனர். முதலில் துபாயின் ஜெபல் அலி பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இந்து கோயிலை அவர்கள் சுற்றிப் பார்த்தார்கள். 80 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த இந்து கோயிலில் சிவன், கிருஷ்ணர், முருகன் என மொத்த 16 சாமி சிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்த

ஆர்வத்துடன் சுற்றிப் பார்த்த

இதனிடையே இன்று மாணவர்கள் அபுதாபியில் உள்ள மிகவும் புகழ்பெற்ற லூவர் மியூசியத்திற்கு சென்றுள்ளனர். சர்வதேச அளவில் உள்ள மிகச் சிறந்த அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் உள்ள கலைப் பொருட்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள முடியும். அபுதாபி செல்லும் அனைவரும் சென்று பார்க்கும் இடங்களில் ஒன்றாக உள்ள இந்த லூவர் மியூசியம் கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.

விளக்கம்

விளக்கம்

பிரான்ஸ் உள்ளிட்ட பல நாட்டு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பொருட்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கச் சுற்றுலா வழிகாட்டியைத் தனியாக நியமித்து உள்ளனர். அவர்கள் அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒவ்வொரு கலைப் பொருட்களையும் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினர். இதனை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

லூவர் மியூசியம்

லூவர் மியூசியம்

இந்த லூவர் மியூசியம் அபுதாபி மற்றும் பிரான்ஸ் அரசுக்கும் இடையே போடப்பட்ட 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அரேபிய தீபகற்பத்தில் மிகப் பெரிய அருங்காட்சியகமாக உள்ள இது, கடந்த 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

English summary
Abu Dhabi louvre museum Tamilnadu govt school students in Educational tourism: Tamilnadu govt steps taken in govt school students Abu Dhabi visit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X