கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வீணாக்கியதில் முதலிடத்தில் தமிழகம்!
சென்னை: நாட்டில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் வீணாக்கிய மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இந்தியாவில்தான் மிக மோசமாக உள்ளது. நாள்தோறும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

தமிழகம் 4-வது இடம்
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. பல மாநிலங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. ஆனால் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசு விளக்கம்
அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசிகள், படுக்கைகள், மருந்துகள் எதிலும் பற்றாக்குறையே இல்லை என்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிகம் வீணானது
அதாவது கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் வீணாக்கியதில் தமிழகம்தான் முதலிடமாம். இதுவரை 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதில் 44 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டுள்ளனவாம். இந்த அடிப்படையில் தமிழகம்தான் 12.10% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி உள்ளதாம். ஹரியானா 9.74%; பஞ்சாப் 8.12%; மணிப்பூர் 7.8% ; தெலுங்கானா 7.55% அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி இருக்கின்றன.

தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்கள்
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்காத மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் டையூ, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவுகளில் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications