நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள தவறும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பயிற்சி வகுப்பு
இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர மாநில தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் 27,812 தேர்தல் பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நாளை பயிற்சி வகுப்பு நடத்துகிறது.

200 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தல்
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறுகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 27,812 பணியாளர்கள் தேர்தல் பணிக்காக தேர்வு செய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
மேலும், பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் நாளை குறுஞ்செய்தி அனுப்பப்படும் நாளை நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பணி ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு சென்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

மீறினால் நடவடிக்கை
இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணியாணை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ளத்தவறும் நபர்களின் மீது தேர்தல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைவரும் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications