சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருமகள் மீதும் பாய்ந்த ஆக்சன்.. தெலுங்கானா வரை நீளும் ரெய்டு.. கே.பி அன்பழகனுக்கு வைக்கப்படும் செக்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வரும் விஜிலன்ஸ் ரெய்டில் அவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம், சென்னை மட்டுமின்றி தெலுங்கானாவில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

இன்று காலையில் இருந்து முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கும் 6வது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை! முதல் அலையை விட அதிக பாதிப்பு.. இந்த 6 மாநிலங்களில் நிலைமை மிக மோசம்.. மத்திய அரசு கவலை!

வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவரின் வங்கி லாக்கரில் சோதனை செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

முடியவில்லை

முடியவில்லை

மொத்தம் 58 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரெய்டு முடிந்துவிட்டது. மற்ற இடங்களில் இந்த ரெய்டு இன்னும் முழுமையாக முடியவில்லை. ரெய்டில் கே.பி அன்பழகன் அவரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2.87 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6.6 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த ஆவணங்களை மீறி பல இடங்களில் அவர் சொத்துக்களை சேர்த்து இருக்கிறார்.

கேபி அன்பழகன்

கேபி அன்பழகன்

பல இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி அவர் சொத்து சேர்த்து இருக்கிறார். இதை அடிப்படையாக வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த காரணத்தால் மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள், சொத்துக்கள் அவரின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முறையாக கணக்கு காட்ட வேண்டும் என்று கூறி தற்போது பறிமுதல் செய்த சொத்துக்களை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச ஒழிப்புத்துறை

இவர் வங்கிகளில் முறைகேடாக பணம் சேர்த்ததும் இந்த ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வங்கி ஆவணங்களும் இந்த ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சில அசையா சொத்துக்களையும் வருமானத்திற்கு அதிகமாக இவர் வாங்கி இருக்கிறார். கே.பி அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக வாங்கிய அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சொத்து

சொத்து

தற்போது இவரின் வங்கி பெட்டகங்கள் திறந்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் இருந்தும் கூடுதல் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இவர் மீதும் , இவரின் குடும்பத்தினர், உறவினர் மீதும் சொத்துகுவிப்பு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. 2016 -2021 காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர் பெயரிலும் சொத்து சேர்த்துள்ளார்.

 மருமகள்

மருமகள்

இதனால் இவரின் மனைவி, மகன், மருமகள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் தனது மருமகள் பெயரிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த சொத்து குவிப்பு வழக்கு மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் நாட்களில் கே.பி அன்பழகனுக்கு சம்மன் அனுப்பி அவர் மீது விசாரணை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட அதிக சொத்து இந்த ரெய்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu vigilance puts case against Ex Minister K P Anbalagan daughter in law also after the raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X