லாக்டவுன்.. எந்தெந்த மாவட்டங்களில் தளர்வு வரலாம்.. எங்கெல்லாம் கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு திட்டம்?
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் பரவல் குறைந்து வரும் நிலையில் மாவட்ட வாரியாக தளர்வுகள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் எந்தெந்த மாவட்டங்களில் தளர்வுகள் வரலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தீவிர லாக்டவுன் அமலில் உள்ளது. கொரோனா லாக்டவுன் கொண்டு வரப்பட்ட பின் வரிசையாக கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன. சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது.
கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த புதிய லாக்டவுன் அமலில் உள்ளது.

தளர்வு
இந்த நிலையில் படிப்படியாக தளர்வுகளை கொண்டு வரும் முடிவில் தமிழக அரசு இருக்கிறது. மொத்தமாக கட்டுப்பாடுகளை திறந்து இடாமல் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை கொண்டு வருகிறார்கள். அதிகமாக கேஸ்கள் இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகளை கொண்டு வராமல் கடுமையான கட்டுப்பாடுகளை நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தகவல்
கேஸ்கள் குறைவாக உள்ள, டிபிஆர் குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் வரலாம் என்று கூறுகிறார்கள். விருதுநகர், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி
இங்கு தினசரி கேஸ்கள் 600க்கும் கீழ் உள்ளது. இந்த மாவட்டங்களில் டிபிஆர் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இங்கு தளர்வுகள் வரலாம் என்று நம்பப்படுகிறது. இது போக திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், தஞ்சாவூர், சேலம், நீலகிரி, நாமக்கல், நாகபட்டிணம், மதுரை, கன்னியாகுமரி, கடலூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை.

கேஸ்கள்
இங்கு இன்னும் டிபிஆர் அதிகமாக உள்ளது. அதாவது 100 பேரில் டெஸ்ட் செய்தால் இங்கெல்லாம் 40 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா வருகிறது. இங்கு தினசரி கேஸ்கள் 600க்கும் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தகவல்கள் வருகின்றன.

சென்னை
சென்னை மற்றும் செங்கல்பட்டிற்கு தனிப்பட்ட விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள். இங்கு கேஸ்கள் குறைந்தாலும் இன்னும் மொத்தமாக பாதிப்பு போகவில்லை. இதனால் சென்னை, செங்கல்பட்டிற்கு தனிப்பட்ட விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என்கிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications