பொங்கல் நம் தமிழ் மக்களின் பல்லாயிரம் ஆண்டு கால கலாச்சார திருவிழா.. வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்த அறுவடைத் திருநாளில் எங்கிருந்தாலும் எல்லா கிராமங்களிலும் சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் மரியாதை செலுத்துவோம்" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற சொல்லை ஆளுநர் தவிர்த்திருந்த நிலையில், ஆளுநரின் பொங்கல் விருந்தை முதலமைச்சர், ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக ராஜ்பவன் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்மையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று தன்னார்வலர்களைப் பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால் அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்." என்று தெரிவித்திருந்தார்.

அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர்

அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர்

ஆளுநரின் இந்தக் கருத்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களின் கண்டனத்தைச் சந்தித்தது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க 'தமிழ்நாடு' எனும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதைத்தொடர்ந்து பொங்கல் திருநாளுக்காகத் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் அனுப்பிய தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழக அரசு இலட்சினை இல்லாமல் இந்திய அரசின் இலட்சினை இருந்தது. அதுமட்டுமின்றி அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் மாளிகை செய்தி

ஆளுநர் மாளிகை செய்தி

இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் எனக் கூறுவதை விட தமிழ்நாடு எனச் சொல்வதே சரியானது எனக் குறிப்பிட்ட ஆளுநர் ரவி, வழக்கத்திற்கு மாறாக இந்த முறை ஆளுநர் மாளிகை பொங்கல் விருந்து அழைப்பிதழிலும், தமிழ்நாடு அரசின் இலட்சினையைப் புறக்கணித்து தமிழ்நாடு என்ற சொல்லையும் தவிர்த்திருந்த நிலையில், ஆளுநரின் பொங்கல் விருந்தை ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

தமிழ்நாட்டு ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையைப் பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுக்கால கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை 'ஜல்லிக்கட்டு' விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடைத் திருநாளில் எங்கிருந்தாலும் எல்லா கிராமங்களிலும் சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் மரியாதை செலுத்துவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+