அரசு டாஸ்மாக்கில் அதிரடி.. மதுக்கடைகள் மட்டுமல்ல, இறைச்சி கடைகளுக்கும் இந்த நாளில் லீவு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்தாண்டு ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கான உத்தரவை மாநகராட்சிகள் பிறப்பித்துள்ளன.

நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய்தான், தமிழக அரசுக்கு பெருமளவில் கிடைத்து வருகிறது. அதாவது, மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக் மதுக்கடைகளிலிருந்து கிடைத்து வருவதாக சொல்கிறார்கள்.

tasmac meat shops mahavir jayanti

மதுக்கடைகள் செயல்பாடு

தற்போது தமிழகத்தில் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைத்து கொண்டிருக்கிறது.. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு வருவாய் என்றால், விடுமுறை நாட்களில் இந்த வருவாய் இரண்டு அல்லது மூன்று மடங்காக பெருகிவிடுகிறது.

எனினும், ஒருசில முக்கியமான நாட்களில் மதுக்கடைக்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, மகாவீரர் பிறந்த நாளான மகாவீர் ஜெயந்தி இந்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மகாவீரர் ஜெயந்தி தினம்

இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

இநநிலையில், தமிழ்நாட்டில் பகவான் மகாவீரர் ஜெயந்தி தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கமாகும். இதுகுறித்த அறிவிப்பினை, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பார்கள்.. இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியையொட்டி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக்கூடங்களையும் மூட பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

சென்னை கலெக்டர் அறிவிப்பு

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+