TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியான ‛சூப்பர்’ அறிவிப்பு
சென்னை: பிரபல தனியார் மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்ஸில் Executive பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் உள்ள முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS) நிறுவனம் உள்ளது.
சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Service) எனும் டிசிஎஸ்/TCS நிறுவனத்தில் தற்போது Executive (FPNA/Pricing)பணிக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளது. இந்த பிரிவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. மாறாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி என்ன?
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் BBA,BBM,BBS,Bachelor of Commerce படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் தொடர்புடைய பிரிவில் 4 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் சம்பளம் பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில் தகுதி, திறமையின் அடிப்படையில் நல்ல ஊதியம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடைசி தேதி என்ன?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறும் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பத்தார்கள் நேர்க்காணல் அல்லது திறனறி தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி மாதம் 31ம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
டிசிஎஸ் நிறுவனத்தின் https://www.tcs.com/ அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று Careers என்பதை கிளிக் செய்து Search Jobs என்பதில் பணி தொடர்பான அறிவிப்பில் கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து விண்ணப்பம் செய்ய Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications