ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கிங்ல சம்பவம்! அந்த ஹீரோயினால் விஜய் மாட்டுனாரு! திருச்சி சூர்யா ஷாக்
சென்னை: தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரம் குறித்து, பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா 'ஒன்இந்தியா தமிழ்' யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தமிழக அரசியலில் 'தளபதி'யாக தடம் பதிக்கத் துடிக்கும் விஜய்க்கு, இப்போது சொந்த வீட்டுப் பிரச்சனையே பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. விஜய்யின் மனைவி சங்கீதா நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியிருப்பதாகச் சொல்லப்படும் விவகாரம் குறித்து, திருச்சி சூர்யா வெளுத்து வாங்கியிருக்கிறார்.

"அன்னைக்கு நான் பார்த்த சாட்சி!"
பேட்டியின் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய சூர்யா, "நான் ஒரு காலத்துல எல்லா வாரமும் திருச்சி - சென்னைன்னு பிளைட் புடிச்சு வந்து பார்ட்டி அட்டென்ட் பண்ணவன். அப்போ நடந்த கூத்துகள் எல்லாம் எனக்கு அக்குவேறு ஆணிவேறா தெரியும். ஒரு ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கிங்ல "அந்த" அம்மா போதையில பண்ணுன ரகளையெல்லாம் நான் நேர்ல பார்த்திருக்கேன்" என ஒரு நடிகையைக் குறிப்பிட்டு குண்டைத் தூக்கிப் போட்டார்.
சுசி லீக்ஸ் முதல் டிரக்ஸ் வரை!
"விஜய் வீட்டில நடக்குற பார்ட்டின்னா அங்க டிரக்ஸ் இல்லாம இருக்காதுன்னு அவரோட நெருங்கிய நண்பர்களே சொல்றாங்க. சுசி லீக்ஸ்ல வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஏன் இன்னைக்கு வரைக்கும் விஜய் தரப்புல இருந்து எந்த ஒரு டிபர்மேஷன் (அவதூறு) வழக்கும் போடல?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பொருளாதார நெருக்கடி... சங்கீதாவின் கண்ணீர்?
2022 செப்டம்பர் மாசமே இந்த விவகாரம் பூதாகரமாகிடுச்சு. 'அந்த நடிகையோட தொடர்பை விட்டுடுறேன்'னு சொன்ன விஜய், அதைச் செய்யலை. இதைக் கேட்ட சங்கீதாவை, விஜய் பொருளாதார ரீதியா லாக் பண்ணிட்டாரு. வீட்டுல இருக்கிற மனைவிக்கு காசு கொடுக்காம, அவங்க நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு ரூமுக்குள்ள அடைச்சு வைக்காத குறையா நடத்துறீங்களே... இதுதான் நீங்க சொல்லப்போற சமூக நீதியா?" என விஜய்யின் அரசியல் கொள்கையை நோக்கி ஈட்டியைப் பாய்ச்சினார் சூர்யா.
"பொண்டாட்டியைப் பாத்துக்காதவன்... நாட்டைப் பாத்துப்பாரா?"
விஜய்யின் வாரிசுகளுக்கு 25, 20 வயசு ஆகுது. வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரியாததா? ஊருக்கெல்லாம் 'நெஞ்சில் குடியிருக்கும்'னு நீங்க பஞ்ச் பேசுறீங்க... ஆனா, உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கே நிம்மதி இல்லை. கலைஞரோட குடும்பத்துலயோ, ஸ்டாலின் சாரோட வீட்லயோ அவங்க மனைவிகள் இப்படி கோர்ட்டுக்கு வந்திருக்காங்களா?
கட்டின பொண்டாட்டியை ஒழுங்கா பார்த்துக்காத நீங்க, எப்படி நாட்டை ஆளப்போறீங்க?" இது வெறும் வதந்தி கிடையாது. டிசம்பர் மாதமே சங்கீதா தரப்பில் இருந்து நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இப்போது நீதிமன்றம் மூலம் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விஜய் அந்த நோட்டீஸை வாங்க மறுக்கிறார். சட்டம் தன் கடமையைச் செய்யும்; இன்று அல்லது நாளை அவரது வீட்டு வாசலில் அந்த நோட்டீஸ் ஒட்டப்படும். அப்போது இந்த 'தற்குறி' கூட்டத்திற்கு உண்மை என்னவென்று புரியும் என திருச்சி சூர்யா எகிறியிருப்பது 'தமிழக வெற்றிக் கழக'த் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விஜய்யின் வீட்டு வாசலில் நீதிமன்ற நோட்டீஸ் ஒட்டப்படும் நிலையில் இருப்பதாக சூர்யா சொல்லும் தகவல்கள், பெரிய விவாதமாக மாறியிருக்கிறது.
-
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ்












Click it and Unblock the Notifications