தமிழகத்தில் மீண்டும் வந்தது இ-பாஸ்.. இந்த 5 பகுதிகளுக்கு செல்ல கட்டாயம்.. அரசு அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும், வாகனங்களில் பயணிக்க இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video
கடந்த வருடம், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. திருமணம், உடல்நிலை, துக்க நிகழ்வுகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால், இந்த வருடம் இ-பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டிருந்தது.

இ-பதிவு vs இ-பாஸ்
இ-பாஸ் மற்றும் இ-பதிவு இடையே பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. இரண்டிலுமே அரசின் வெப்சைட்டில் போய், தங்களைப் பற்றிய தகவல்களை ஆவணங்களோடு பதிவு செய்ய வேண்டியது பயணிகளுக்கு கட்டாயம்தான் என்றபோதிலும், இ-பதிவுக்கு கலெக்டர் அனுமதி தேவையில்லை. பதிவு செய்து விட்டால் அதைக் காட்டியே வாகனங்களில் பயணிக்க முடியும். ஆனால் இ-பாஸ் என்பது நாம் பதிவு செய்த பிறகு அதை பரிசீலனை செய்து கலெக்டர் அலுவலகம் ஒப்புதல் தரும் நடைமுறை. ஒருவேளை ஒப்புதல் தராமல் நிராகரிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

மீண்டும் வந்த இ-பாஸ்
தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு காலம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில சுற்றுலா தலங்களுக்கு இ-பாஸ் அவசியம் என அரசு கூறியுள்ளது. இன்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ள தகவல்களை பாருங்கள்.

கலெக்டர்கள் இ-பாஸ்
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த ஊரை பூர்வீகமாக கொண்டவர்கள், காவல்துறையிடம் உரிய ஆவணங்களை காண்பித்து, பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 மாவட்டங்கள்
இது தவிர, வாடகை வாகனங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் , கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை என 11 மாவட்டங்களில் நோய் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருவதால், அவற்றை தவிர்த்து பிற மாவட்டங்களில், வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவு செய்து செல்ல அனுமதிக்கப்படும்.

எத்தனை பேர் பயணம் செய்யலாம்
மேலும் வாடகை டாக்சியில், ஓட்டுனர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் மட்டும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications