சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி பார்க்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

Recommended Video

    வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்..!

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தயார்படுத்தும் விதமாக கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

    தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370ம், பெண்கள் 3,09,25,603 பேர், இதர பிரிவினர் 6,385 பேர் உள்ளனர்.

    பெயர் சேர்ப்பு முகாம்

    பெயர் சேர்ப்பு முகாம்

    தமிழகத்தில் 1.1.2021ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தாலுகா அலுவலகம், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    20 லட்சம் பேர் விண்ணப்பம்

    20 லட்சம் பேர் விண்ணப்பம்

    மேலும் ஆபிஸ் போகிறவர்களின் வசதிக்காக 21.11.2020, 22.11.2020 மற்றும் 12.12.2020, 13.12.2020 ஆகிய 4 நாட்கள் (சனி, ஞாயிறு) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.99 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 4.43 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.36 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.88 லட்சம் பேர் என மொத்தம் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

    இறுதி பட்டியல்

    இறுதி பட்டியல்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார். தமிழகத்தில் 3.08 கோடி ஆண் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 7246 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2021ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

    கலெக்டர்கள் வெளியிடுகிறார்கள்

    கலெக்டர்கள் வெளியிடுகிறார்கள்

    சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    English summary
    The final voter list for Tamil Nadu is to be released this morning. The district wise list is to be published by the respective district collectors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X