இந்தியா மறந்த முதல் ஒலிம்பிக் வெற்றி வீரர்! யார் இவர்? சாதித்தது என்ன?
சென்னை: இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு முதல் முதலாகப் பதக்கம் பெற்ற வீரர் யார் தெரியுமா? அவர் எந்த ஆண்டு அந்த சாதனையை நிகழ்த்தினார் என்று தெரியுமா?
2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவின் நம்பிக்கை சின்னமாக விளங்கிய வீராங்கனை வினேஷ் கோகட் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்த காரணத்தால் இந்தத் தகுதி நீக்கம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் பலரும் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் கனவை முதல்முதலாக நிறைவேற்றிய வீரர் யார்? அவர் எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை வென்றார் என்ற வரலாற்றைத் தேடித் தெரிந்து கொள்வது முக்கியமாகிறது. இந்தியாவின் ஒலிம்பிக் கனவை நிஜமாக்கிய வீரர் பெயர் கஷாபா தாதாசாகேப் ஜாதவ்.
இவர் 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றார். அதில் தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார். இதன் மூலம் கே.டி.ஜாதவ் இந்திய மல்யுத்த திறமையை உலக வரலாற்றில் பதியவைத்தார். இவர்தான் சுதந்திர இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் ஆவார்.
ஆனால், இன்றைக்கு அவரது பெயரைப் பலரும் மறந்துவிட்டனர். ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியை இந்தியர்கள் பலர் நினைவில் வைத்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் ஆரம்பக்கால ஹீரோக்களில் ஒருவரான ஜாதவை மறந்துவிட்டனர். ஜாதவுக்கு முன், பிரிட்டிஷ் கால இந்தியாவில் 1900ஆம் ஆண்டு நார்மன் பிரிட்சார்டின் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஆனால், இவர் இனரீதியாக பிரிட்டிஷ்காரர். இந்தியர் இல்லை. முன்புகூட யாரும் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றதில்லை.
மகாராஷ்டிராவிலுள்ள ஒரு சிறிய கிராமமான கோலேஷ்வரில் ஜனவரி 15, 1926 ஆம் ஆண்டு திறமை மிக்க மல்யுத்த வீரர் குடும்பத்தில் பிறந்தார் கஷாபா. உள்ளூர் மல்யுத்த அரங்கங்களில் விடாமல் பயிற்சி பெற்றார். அதன் மூலம் அவரது திறமைகள் ஒளிர்ந்தது. ஜாதவின் முதல் போட்டி கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரியில் நடைபெற்றது.
மல்யுத்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டி விளையாட்டு ஆசிரியரை அவர் அணுகியபோது, அவரது மெலிந்த உடலையும் குட்டையான உருவத்தையும் பார்த்து நிராகரித்துவிட்டார். அப்போது 23 வயது நிரம்பிய ஜாதவ், தனக்கு வாய்ப்பு கேட்டு கல்லூரி முதல்வரிடம் முறையிட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எதிரிகளை வென்றார் ஜாதவ். இது அவரது எதிர்காலத்திற்குக் களம் அமைத்துத் தந்தது.
அவரது தந்தை, வழிகாட்டிகளான பாபுராவ் பாலாவ்டே, பெலாபுரி குருஜி ஆகியோர் இவரது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். ஜாதவ் தனது கட்டுக்கோப்பு மிக்க மிருக பலத்தை மட்டுமே நம்பவில்லை. அதற்குப் பதிலாக, அவர் 'தக்' நுட்பங்களைப் பயன்படுத்தினார். இதனால் அவரை 'பாக்கெட் டைனமோ' என்று புனைபெயரை இட்டு அழைத்தனர். அவரது சுறுசுறுப்பும் திறமையும் அவருக்குப் பல மாநிலங்களில் தேசிய அளவில் பதக்கங்களைப் பெற்றுத் தந்தது. 1948 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக இவரது பயணத்திற்கு தேவையான நிதியை கோலாப்பூர் மகாராஜா தந்து உதவினார்.
1948 லண்டன் ஒலிம்பிக்கில், ஜாதவ் ஃப்ளைவெயிட் பிரிவில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். இருந்தபோதும் அதில் ஜாதவ் அதிருப்தி அடைந்தார். அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். தினமும் 300 புஷ்-அப்கள் எடுத்தார். 1,000 சிட்-அப்கள் செய்தார். அசாதாரண அர்ப்பணிப்பை அளித்தார். ஆயினும், ஜாதவ் 1952 ஹெல்சின்கி ஒலிம்பிக்கிற்கான தனது வெற்றிக்கான பாதையில் சில தடைகளைச் சந்தித்தார்.
தேசிய ஃப்ளைவெயிட் சாம்பியனான நிரஞ்சன் தாஸை பலமுறை தோற்கடித்த பிறகு, ஜாதவ் பாட்டியாலா மகாராஜாவிடம் மீண்டும் உதவி கேட்டு நின்றார். அவர் உறுதியுடன் ஜாதவ் வெற்றிபெற மற்றொரு போட்டியை ஏற்பாடு செய்தார். இந்த வெற்றி அணியில் அவருக்கு ஒரு இடத்தை வழங்கியது. அப்படி இருந்தும் நிதி ஒரு சவாலாக இருந்தது. உறுதியான ஜாதவ் தனது கிராம மக்களிடமிருந்து பணம் திரட்டினார். மேலும் 7,000 ரூபாக்கு அவரது வீட்டை அடமானம் வைத்தார்.
கேடி ஜாதவ் சாம்பியனாவதற்கு ஃபின்லாந்த் தலைநகரம் ஹெல்சின்கி செல்ல காத்திருந்தார். 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில், ஜாதவ் தனது ஆரம்ப போட்டிகள் அனைத்திலும் வென்றார். ஜூலை 22 அன்று தனது இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே இவர் பதக்க வாய்ப்பைப் பெற்றார். இருப்பினும், 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்த ஒரு கடுமையான போட்டியில், ஜூடோகாவாக மாறிய மல்யுத்த வீரரான ஜப்பானின் ஷோஹாச்சி இஷிக்கு எதிராக அவர் போராடினார். அதில் இவர் ஒரு புள்ளியில் இஷியிடம் தோற்றார்.
இறுதியில் அவர் தங்கத்தை வென்றார். இந்த சோர்வுற்ற போட்டிக்குப் பிறகு, சோவியத் யூனியனின் ரஷித் மம்மத்பேயோவை எதிர்கொள்ள ஜாதவ் மீண்டும் அழைக்கப்பட்டார். சண்டைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 நிமிட ஓய்வு தேவை என்ற விதிகள் இருந்தபோதிலும், ஜாதவ் சார்பாக வாதிட எந்த இந்திய அதிகாரியும் இல்லை. ஜாதவ் தனது முந்தைய சண்டையில் சோர்வடைந்து இருந்தார். தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஜாதவால் முடியவில்லை. ஆகவே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை மம்மத்பேயோவ் பயன்படுத்திக் கொண்டார்.












Click it and Unblock the Notifications