சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொங்கல் பரிசு தொகுப்பை இன்னும் வாங்கலையா..? கவலைப்படாதீங்க .. அரசு வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் வெல்லம், கரும்பு, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 17ஆம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு.. மின், குடிநீர் இணைப்புகள் தரப்படாது.. தமிழக அரசு திட்டவட்டம்நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு.. மின், குடிநீர் இணைப்புகள் தரப்படாது.. தமிழக அரசு திட்டவட்டம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழு கரும்பு ஆகியவை இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை கடந்த 4ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலும் இந்த திட்டமானது நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேசன் பொருட்களை சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்று வருகின்றனர்.

திட்டம் குறித்து ஆய்வு

திட்டம் குறித்து ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பில் சில குறைபாடுகள் உள்ளதாக வந்த புகார்களை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டங்களை அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க வேண்டும் எனக் கூறினார் மேலும் தானே களத்தில் இறங்கி சென்னையில் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு கொடுத்து முதல்வர் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் தமிழகத்தில் பலர் இன்னும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை பெறாமல் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை

பொங்கல் பண்டிகை திருவள்ளுவர் தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு காரணமாக ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது இதனால் வெளியூரில் வசிப்பவர்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை விடுமுறைக்கு வந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டது மேலும் தமிழகத்தில் 17ஆம் தேதியும் அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது 18ஆம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால் 17ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் உள்ளவர்களுக்கு ஏதுவாக திங்கட்கிழமை ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை திங்கட்கிழமை அதாவது 17ஆம் தேதியும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திங்கட்கிழமை நியாயவிலைக் கடை விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் பொங்கல் பரிசு பொருட்கள் பெறாதவர்கள் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்வதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Government of Tamil Nadu has announced that the family card holders who have not yet received the gift package containing jaggery, sugarcane, rice and groceries will also be able to receive it on January 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X