நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் - எங்கெங்கு தெரியும் இந்தியாவில் பார்க்க முடியுமா
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நிகழப்போகிறது. முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா? எந்தெந்த நாடுகளில் சந்திர கிரகணத்தை பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: முழு பவுர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும்.
வெள்ளிக்கிழமையன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.

கிரகணம் ஏன் ஏற்படுகிறது
வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.

மிக நீண்ட சந்திர கிரகணம்
வெள்ளிக்கிழமை வரும் 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.32 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.30 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்
இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை பார்க்க முடியும். மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக இந்த பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது
இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் நிகழப்போகும் மிகநீண்ட சந்திர கிரகணம் கடந்த 1440ம் ஆண்டில் நிகழ்ந்தது. இது போன்ற நீண்ட கிரகணம் அடுத்து 2669ம் ஆண்டில் தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி தரிசனம் செய்ய பாதிப்பு இல்லை
வரும் 19ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. அனைத்து கோவில்களிலும் மகா தீபத்திருவிழா நடைபெற உள்ளது. வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவார்கள். கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

டிசம்பர் 4ல் சூரிய கிரகணம்
டிசம்பர் 04ஆம் தேதி கார்த்திகை 18ஆம் தேதியன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. சனிக்கிழமையன்று காலையில் 10.59 மணி முதல் பிற்பகல் 03.07 மணிவரை கேட்டை நட்சத்திரத்தில் நிகழும் இந்த கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. இதற்கு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தெரியும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications