சென்னை மருத்துவமனைகளில் மெல்ல நிரம்பும் கொரோனா பெட்கள்..2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் நிலைதான் மோசம்
சென்னை: தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களின் நிலை மோசமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா பரவலின் மூன்றாவது அலை இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எண்ணிக்கையும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் பாதிப்பு
இந்த நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதான் சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பலன் அளிக்கும் தடுப்பூசி
சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையை விட தற்போது வேகமாக இருந்தாலும், பாதிப்பானது குறைவாகவே உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட வில்லை. இதற்கு காரணம் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பது தான் என மருத்துவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை 1090 ஐசியூ படுக்கைகளில் 50 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன என கூறியுள்ளனர்.

ஐசியு படுக்கைகள்
அரசு பொது மருத்துவமனை மருத்துவர் தேரணிராஜன் இது குறித்து பேசும்போது, 231 நோயாளிகள் யெஸ் ஜீன் வீழ்ச்சி பாதிப்புடன் இருந்தனர் எனவும், ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் அளிக்க தேவை ஏற்படவில்லை எனக் கூறினார். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐசியு படுக்கைகள் தேவைப்படும் நபர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் எனவும், தற்போது சிகிச்சை பெற்று வரும் 17 நோயாளிகளை பதினோரு பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றார்.

தடுப்பூசி இல்லை என்றால் ஆபத்து
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி இது குறித்து பேசுகையில், மருத்துவமனையில் தற்போது அவசர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் எட்டுபேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை முன்கூட்டியே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி போடாமல் இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
Recommended Video

மக்களுக்கு கவனம் தேவை
தற்போதைய தகவல்களின் படி சென்னை மாநகர பகுதிகளில் வசிக்கும் மக்களின் 92 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசியையும் 72 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியையும் போட்டுள்ளனர். மேலும் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டு 50 நாட்களுக்கு மேல் ஆகி உள்ளதால் பாதிப்பு சற்று குறைவாக இருப்பதாகவும் , இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி மற்றும் தடுப்பூசியே போட்டுக் கொள்ளாதவர்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications