ஆய்வுகுழு முதல் அனைத்து கட்சி கூட்டம் வரை.. 2021 ஜூலை முதல் நீட் விலக்கு மசோதா கடந்து வந்த பாதை
சென்னை : நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் நீட் விலக்கு மசோதா கடந்து வந்த பாதையை இந்த பதிவில் பார்க்கலாம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்காமலும் அந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த 1ஆம் தேதியை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் சட்டமன்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியானது. ஆளுநரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.
தமிழகத்தின் தற்போதைய பேசுபொருளாக இருக்கும் நீட் தேர்வு மசோதா குறித்து விரிவான தகவல்கள் இதே:
01 மே 2021 : தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்
05 ஜுன் 2021 : நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
29 ஜுன் 2021 : தமிழக அரசு அமைத்த நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிம்ன் விசாரணை தொடங்கியது
13 ஜுலை 2021 : நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட நீட் ஆய்வுக்குழு அமைத்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
15 ஜுலை 2021 : நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராந்த நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்பித்தது.
16 ஜூலை 2021: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்து நீட் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.
13 செப்டம்பர் 2021: நீட் ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளையேற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
14 செப்டம்பர் முதல் : தொடர்ந்து மூன்று மாதங்களாக நீட் விலக்கு குறித்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
27 நவம்பர் 2021: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
04 ஜனவரி 2022 : தமிழக சட்டமன்ற 2022ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தப்படும் என வாசித்தார்.
ஜனவரி 2022 : நீட் விலக்கு மசோதா குறித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றபோதும், 3 முறை சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
17 ஜனவரி 2022 : திமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தனர்.
25 ஜனவரி 2022 : ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட குடியரசு தின செய்தியில், நீட் தேர்வுக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் அதிகளவு சேருவதாக கூறியிருந்தார்.
31 ஜனவரி 2022 : மத்திய அரசு தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்ரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
01 பிப்ரவரி 2022 : நீட் விலக்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 1 ஆம் தேதி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
03 பிப்ரவரி 2022 : தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 1 ஆம் தேதி அரசுக்கே திருப்பி அனுப்பியதாக ஆளுநர் மாளிகை கூறியது.
03 பிப்ரவரி 2022 : ஆளுநரின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவரை திரும்ப பெறக்கோரி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
03 பிப்ரவரி 2022 : ட் விலக்கு குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த 1 ஆம் தேதி அரசுக்கே திருப்பி அனுப்பி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
05 பிப்ரவரி 2022 : தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்ளாத நிலையில் பெரும்பலான கட்சிகள் பங்கேற்றன. இதில் நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications