இந்த நிலைமையா? பேச்சுவார்த்தை முடிந்ததும் விஜயகாந்தை விட்டுவிட்டு சென்ற தேமுதிக.. அதிர்ந்த ஓ.பி.எஸ்
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தேமுதிகவினர் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே விட்டுவிட்டு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை முடிந்ததும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தேமுதிகவினர் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே விட்டுவிட்டு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேமுதிக- அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தேமுதிகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். இதன் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடந்த விஷயம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி நேரம்
அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியான பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சந்திப்பில், முதலில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் செய்தியாளர் சந்திப்பு நடக்கும் இரண்டு நிமிடத்திற்கு முன் அவர் அந்த இடத்திற்கு வந்தார். ஆனால் அவர் செய்தியார்கள் சந்திப்பில் எதுவும் பேசவில்லை.

உடல்நிலை சரியில்லை
விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுவிட்டு வந்ததில் இருந்தே ரொம்ப அமைதியாகத்தான் இருக்கிறார். அவரால் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை சரியாக கவனிக்க முடியவில்லை. பல்வேறு விஷயங்களை அவரால் சரியாக கிரகித்து பழையபடி செயலாற்ற முடியவில்லை. நடக்கும் போது கூட அவருக்கு யாராவது உதவ வேண்டி இருக்கிறது.

இப்படி செய்யலாமா
இப்படி உடல்நிலையில் இருக்க கூடிய நபரைத்தான் தேமுதிகவினர் செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் விட்டுவிட்டு சென்று இருக்கிறார்கள். அந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும், உடனடியாக அந்த இடத்தில் இருந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷும் கிளம்பி சென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் மற்ற தேமுதிகவினரும் சென்று இருக்கிறார்கள்.

தெரியாமல் இருந்துள்ளார்
வரிசையாக தேமுதிகவினர் அங்கிருந்து கிளம்பி சென்று இருக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்கள் எதுவும் தெரியாமல் அங்கேயே விஜயகாந்த் அமர்ந்து உள்ளார். தேமுதிகவினர் அவரை அங்கேயே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அருகிலேயே என்ன நடக்கிறது என்று புரியாமல் , விஜயகாந்த் அமர்ந்திருந்தார்.

கோபம் அடைந்தார்
இதை பார்த்து முதலில் ஓ.பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். அதன்பின் விஜயகாந்த் எழுந்து நிற்க உதவினார். பின் தேமுதிக நிர்வாகிகளை அழைத்து, விஜயகாந்தை பாதுகாப்பாக அழைத்து செல்லும்படி கூறினார். இதனால் அந்த இடத்தில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications