ஜன்னல் ஓர பயணிகளுக்கு “குறி”.. கால் போச்சே! செல்போன் திருட ரயிலில் “ஜம்ப்”.. மருத்துவமனையில் திருடன்
சென்னை: ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணிகளின் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறிக்க முயன்ற திருடன் கீழே விழுந்ததில் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சென்டரல் டாக்டர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார இரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள், உறங்கிக்கொண்டு செல்லும் பயணிகளை குறிவைத்து நிறைய திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ரயிலில் தொடரும் திருட்டு
இவ்வாறு திருடுபவர்கள் ரயிலில் பயணித்தபடியோ அல்லது, ரயில் தண்டவாளம் ஓரம் நின்றபடியோ திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க ரயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

திருட்டு முயற்சி
இந்த நிலையில்தான் இந்த வழித்தடத்தில் செல்போன் பறிக்க ரயிலில் ஏறிய திருடன் தவறி கீழே விழுந்து அவரது கால் எலும்பு முறிந்து இருக்கிறது. படுகாயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டி வரை செல்லும் ரயில் இந்த திருட்டு முயற்சி நடந்துள்ளது.

திருடன் கால் முறிந்தது
சென்னை கொருக்குப்பேட்டையை நெருங்கிய இந்த ரயில் கேட் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் பொறுமையாக வரும்போது, நவீன் எனப்படும் அட்டை நவீன் அதில் ஏற முயற்சித்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கால் முறிந்து துண்டானது. ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருப்பவர்களிடம் செல்போன் பறித்து செல்வது நவீனின் வழக்கம் என்று கூறப்படுகிறது.

பல வழக்குகள்
செல்போன் திருட்டு போன்ற பல்வேறு திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு இருக்கும் நவீன் மீது ஏற்கனவே கொருக்குப்பேட்டை இருப்புபாதை காவல்நிலையத்தில் ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications