சிக்ஸர் அடித்த இபிஎஸ்! ஓபிஎஸ்ஸை ஒட்டு மொத்தமாய் கழட்டிவிட்ட தேனி! விளம்பரம் கொடுத்து என்ன பிரயோஜனம்?
சென்னை : சென்னை மற்றும் சேலத்திலேயே போஸ்டர் ஒட்டுவது தென் மாவட்ட நிர்வாகிகளை மொத்தமாக சென்னையில் களமிறக்கியது என ஒபிஎஸ் மாஸ் காட்டி வந்தாலும் அவரது சொந்த மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மணிக்கு மணி விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியுடன் உள்ளது...
கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த விவகாரம் அதிமுகவிற்கும் கடும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

அதிமுகவில் சலசலப்பு
கிட்டத்தட்ட ஒரு வாரமாக இந்த விவகாரம் அதிமுகவிற்கு கடும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இருதரப்பினரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். கட்சியில் சுமார் 70 மாவட்ட செயலாளர்கள் உள்ளநிலையில் அவர்களை 60க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் 10 மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம்
முன்பு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக நின்ற முன்னாள் எம்எல்ஏ செம்மலை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பிவிட்டனர் இதனால் அதிருப்தியில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும் தொண்டர்களின் ஆதரவு தனக்குத்தான் இருப்பதாக காட்டிக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் பன்னீர்செல்வம்.

பிரம்மாண்ட போஸ்டர்கள்
ராயபுரம் நுங்கம்பாக்கம் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது மேலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் தென் மாவட்டங்களிலிருந்து நூற்றுக் கணக்கான தொண்டர்களை சொந்த செலவில் வரவழைத்து தொண்டர்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் மாஸ் காட்டி வருகின்றனர் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள்..

நாளிதழ்களில் விளம்பரம்
அதேபோல அதிமுகவில் மற்றொரு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது அதாவது இன்று தமிழகத்தில் வெளியான பல முன்னணி நாளிதழ்களில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரண்டு பக்க விளம்பரம் கொடுத்திருந்தது அதில் ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை பாராட்டிப் பேசியது கட்சியிலும் ஆட்சியிலும் அவர் நிகழ்த்திய சாதனைகள் தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன என்பன உள்ளிட்ட பல விவரங்கள் இடம்பெற்று இருந்தது இதனால் எடப்பாடி தரப்பு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

எடப்பாடிக்கு ஆதரவு
தமிழகம் முழுவதும் தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் கூறியிருந்தாலும் அவரது சொந்த மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக இபிஎஸ் தரப்புக்கு இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் சோலைராஜ். தேனி மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராமர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார். தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் காளை, கம்பம் முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், பெரியகுளம் செயலாளர் அண்ண பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பெரும் பின்னடைவு
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் ஒற்றை தலைமை நிச்சயம் உருவாகும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளதாக கூறினார். இதேபோல எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர் இந்த தகவலை கேட்ட ஒன் ஓ பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இது அவருக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications