"வெட்கக்கேடு.." விழுப்புரம் கொட்டியாம்பூண்டி சம்பவம்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சுடுகாட்டுக்கு இடம்கேட்டு மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய மறுத்த பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர இந்தியாவில் சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கொட்டியாம்பூண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுடுகாடு அமைக்க இடம் இல்லை.
இதனால் சுடுகாட்டுக்கு நிலம் வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு செய்துள்னர். இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உடலை அடக்கம் செய்ய மறுப்பு
இந்நிலையில் தான் அமுதா (65) என்ற மூதாட்டி 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரின் உடலை பொதுமக்கள் புதைக்கவில்லை. மாறாக உடலை வைத்து போராட்டத்தை துவக்கினர். சுடுகாட்டுக்கும் நிலம் வழங்கினால் தான் அமுதாவின் உடலை புதைப்போம் என கூறி அவர்கள் கூறி போராட்டத்தையும் துவக்கினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதையடுத்து அரசு அதிகாரிகள், போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் பேச்சை பொதுமக்கள் கேட்வில்லை. இதனால் போராட்டம் 2 நாட்களாக தொடர்ந்தது. வி சாத்தனூர் செல்லும் சாலையோரம் உடலை அடக்கம் செய்யவும், மே 26ல் நிரந்தர இடம் வழங்குவதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அவரது உடலை அடக்கம் செய்தனர்.

பாலகிருஷ்ணன் கருத்து
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி என்ற கிராமத்தில் அமுதா என்ற பட்டியல் ஜாதி பெண்ணின் உடை புதைக்க இடமில்லாமல் 3 நாட்கள் போராட்டம் நடந்துள்ளது.

வெட்கக்கேடு
3 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மயானத்திற்கான கோரிக்கை நீடிக்கிறது. சுதந்திர இந்தியாவில் சுடுகாட்டுக்கே வழியில்லை என்றால் இது நாகரீக சமூகத்திற்கே வெட்கக்கேடு. அரசாங்கம் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைந்து செயல்பட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
-
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications