சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகோவுக்கு தண்டனை.. தர்மசங்கடத்தில் திமுக.. விரக்தியில் மதிமுக!

வைகோ கருத்து குறித்து வாய் திறக்க முடியாத சூழலில் திமுக உள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    VAIKO PRESS MEET | நீதிமன்றத்துக்கு வெளியே வைகோ ஆவேச பேட்டி!- வீடியோ

    சென்னை: இன்று காலையில் இருந்து வைகோ விஷயத்தில் என்ன சொல்றதுன்னே தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறது திமுக தரப்பு!

    2009-ல் பதியப்பட்ட வழக்குக்குதான் 10 வருஷம் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 10 வருஷமாக இந்த கேஸ் எந்த நிலைமையில் இருந்தது என்று தெரியாத நிலையில், திடுதிப்பென்று இன்று தீர்ப்பு வழங்கிய பின்னணியோ, காரண காரியமோ நாம் ஆராய தேவையில்லை.

    அதே சமயம், இந்த வழக்கை தொடுத்தது திமுகதான். அதுவும் மறைந்த கருணாநிதிதான். அன்று வைகோவுடன் திமுகவுக்கு இருந்த உறவுமுறையே வேறாக இருந்தது.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    வைகோவின் அசுர வளர்ச்சி, மகன் மீதான கருணாநிதி பாசம் போன்ற காரணங்கள் வரிசைகட்டி நிற்க, கட்சியை விட்டு வெளியேறிய வைகோவை திமுக விரும்பவில்லை. அதே சமயம், ஸ்டாலினை முதல்வராக்க விடவே மாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு பேசினார் அன்றைய வைகோ.

    ராஜ்ய சபா சீட்

    ராஜ்ய சபா சீட்

    ஆனால் இது எல்லாமே காலத்தின் சூழல், திரும்பவும் திமுகவுடன் வைகோ கரம் கோர்க்கும் நிலை ஏற்பட்டது. ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று முழக்கமிட்டார் வைகோ. 27 வருஷத்துக்கு முன்னால் யாரால், எந்த கட்சியை விட்டு வெளியேறினாரோ, இன்று அதே கட்சியில் சம்பந்தப்பட்டவராலேயே ராஜ்ய சபா சீட் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

    கூட்டணி

    கூட்டணி

    கால இடைவெளிகளில் நடந்த விஷயம், இப்போது திமுக, மதிமுக தரப்பினருக்கும் நிறைய தர்மசங்கடங்களை தந்துள்ளது. 10 வருஷம் கழிச்சு திரும்பவும் கூட்டணிக்குள் இணைவோம் என்று இரு கட்சிகளுமே நினைத்து கூட பார்த்திருக்காது.

    சீமான்

    சீமான்

    இப்போது இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளதை திமுக எப்படி எடுத்து கொள்ளும் என்றே தெரியவில்லை. சம்பந்தமே இல்லாத சீமான், வைகோ கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஓங்கி குரல் கொடுத்துள்ளார். ஆனால் கூட்டணியில் உள்ள கட்சியான திமுகவோ என்ன சொல்வது, என தெரியாமல் உள்ளது. ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. இது கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல், இரு கட்சி தொண்டர்களிடமும் இப்படிப்பட்ட இறுக்கமான சூழலே நிலவி வருவதை என்னவென்று சொல்வது?

    English summary
    The DMK including he Party Leader Stalin could not comment on MDMK General Secretary Vaiko's verdict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X