சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புட்டு புட்டு வைத்த திருமாவளவன்.. "முன்னது சனாதனம்.. பின்னது சனநாயகம்".. திரண்ட சிறுத்தைகள்.. செம

திருமாவளவன் பல்லக்கு தூக்குவது குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மரபுகளில் இருவகை. 1.மாற்றத்தை மறுக்கும் இறுக்கமானது. 2.மாற்றத்தை ஏற்கும் நெகிழ்வானது என்று பல்லக்கு தூக்குவது பற்றி திருமாவளவன் விலாவரியாக எடுத்து சொல்லி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரஆதீனத்தில் வருடத்துக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின்போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் உட்கார வைத்து தூக்கி செல்வது வழக்கமாகும்.

ஆனால் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்குவது மனித மாண்புக்கே எதிரானது என திராவிடர் கழகத்தினர் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சங்கிகளின் தில்லுமுல்லு அரசியல்... பெங்களூருவில் நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம் சங்கிகளின் தில்லுமுல்லு அரசியல்... பெங்களூருவில் நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம்

 ஆதீனம்

ஆதீனம்

இந்நிலையில், வருகின்ற மே மாதம் 22ம் தேதி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி ஆதீனத்தில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.. இதையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.. இந்த அறிவிப்புக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்புமாக கிளம்பி வருகிறது.

 அரசியல் உள்நோக்கம்

அரசியல் உள்நோக்கம்

இதுகுறித்து பாஜக தரப்பில் அண்ணாமலை சொல்லும்போது, "தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஏன் அரசு திடீரென தடை விதிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பாஜக இதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அரசு இதனை பரிசீலிக்கும் என நம்புகிறோம். கூலிக்காகவோ அல்லது இழிவாக இருந்தோ ஒருவரை தூக்குவது தவறு அதனை பாஜக விரும்பவில்லை" என்று கூறியிருந்தார்.

திருமாவளவன்

திருமாவளவன்

அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "பல்லக்குத் தூக்குவது காலம் காலமாகத் தொடரும் ஒரு மரபு என்பதால் அதற்குத் தடைவிதிக்கக் கூடாது என இவர்கள் கூச்சலிடுவதற்குக் காரணம் இவர்கள் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிற கோட்பாடு தான். அதுதான் சனாதனம்! அல்லது பார்ப்பனியம்! இன்றையக் கூற்றுப்படி இந்துத்துவம்! அல்லது சங்கத்துவம்!" என்று பதிவிட்டிருந்தார்.

 பழமைவாதம்

பழமைவாதம்

இந்நிலையில், இன்று மீண்டும் ஒருட்வீட் போட்டுள்ளார் திருமாவளவன்.. அதில், மரபுகளில் இருவகை. 1.மாற்றத்தை மறுக்கும் இறுக்கமானது. 2.மாற்றத்தை ஏற்கும் நெகிழ்வானது. முதலாவது, பழமைவாதமெனும் பிற்போக்கு அடிப்படைவாதம். இரண்டாவது, புதுமைவாதமெனும் முற்போக்குத் தாராளவாதம். முன்னது சனாதனம்! பின்னது சனநாயகம்! பல்லக்குத் தூக்குவது சனாதன மரபு. மறுப்பது சனநாயக மரபு" என்று விளக்கமாக பிரித்து கூறியுள்ளார்.

Recommended Video

    3-வது அணி வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் சிறப்புப் பேட்டி
    ஜனநாயகம்

    ஜனநாயகம்

    திருமாவளவன் கூறிய இந்த கருத்துக்கு பலரும் திரண்டு வந்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.. பழமைகளை எதற்காக மாற்ற வேண்டும்.. காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையை மாற்றுவது சரியில்ல.. பெரியவர்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று கற்று தந்துள்ளனர் என்று பலர் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலரோ, ஜனநாயகம் செழித்தோங்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நான்கு பேர் சேர்ந்து ஒருவரை தோளில் சுமந்து செல்வது என்பது ஏற்புடையது அல்.. திருமா சரியாகவே சொல்கிறார் என்று ஆதரவளித்து வருகின்றனர்.

    English summary
    thirumavalavan explains about hindutva ideology and traditions திருமாவளவன் பல்லக்கு தூக்குவது குறித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X