சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொதித்தெழுந்த திருமாவளவன்.. "சோறு ஆக்கி தருவது, துணிமணி தருவது.. இதுவா சேவை".. அதிர்ந்த சென்னை

திருமாவளவன் கல்லூரி மாணவர்களிடம் நிகழ்த்திய உரை வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பௌத்தம் என்பது என்ன? அரசியலமைப்பு என்பது என்ன? மனிதநேயம் என்பது என்ன? என்பது குறித்து கல்லூரி மாணவர்களிடம் திருமாவளவன் ஆற்றிய உரை இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரகாலமாக விசிக தலைவர் திருமாவளவன் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.. ரஷ்யா நாட்டில் கசான் என்னுமிடத்தில் நடைபெற்ற 'உலக ஹலால் நாள்' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பின்னர் நாடு திரும்பியிருந்த நிலையில், சூட்டோடு சூடாக, மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்தார்.

ஜனநாயக சக்திகளின் நல்லாதரவு, தமிழக அரசின் ஒத்துழைப்பால் விளைந்தது நீதி. . திருமாவளவன் பூரிப்புஜனநாயக சக்திகளின் நல்லாதரவு, தமிழக அரசின் ஒத்துழைப்பால் விளைந்தது நீதி. . திருமாவளவன் பூரிப்பு

 போராட்டம் அறிவிப்பு

போராட்டம் அறிவிப்பு

நேற்றைய தினம், செய்தியாளர்களிடம் பேசியபோது, "மோடி அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் தேசிய அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க உள்ளது.. மோடி அரசு சமூக பிளவுக்கு காரணமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த இயக்கத்தில் பங்கேற்க வேண்டும். 25ம் தேதி துண்டு அறிக்கைகள் வழங்கப்பட உள்ளது. 26, 27ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். மீதமுள்ள நாட்களில் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்" என்று அறிவித்தார்.

சமூகப்பணி

சமூகப்பணி

இந்நிலையில், 'மீள் சமூகங்களை உருவாக்குதல்' என்ற தலைப்பில் சென்னை லயோலோ கல்லூரியின் சமூகப்பணி பிரிவு மாணவர்களுக்கான கருத்தரங்கில் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, "சமூகப்பணி துறை என்பது, பிற துறைகளில் இருந்து மாறுபட்ட ஒரு துறை... குறிப்பாக தலைவர்களையே உருவாக்குகின்ற ஒரு துறை... நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது படைப்பாளிகளை விட, ஆசிரியர்களை விட, தலைவர்கள் உருவாக வேண்டும் என்பது தான்.

 அன்பு, பாசம்

அன்பு, பாசம்

யார் வேண்டுமானாலும் ஒரு கட்சியையோ, அமைப்பையோ உருவாக்கலாம். ஆனால் அப்படி பிரகடனபடுத்திக் கொள்பவர்கள் எல்லாம் தலைவர்கள் கிடையாது.. தலைவர்கள் பிறரால் உருவாக்கப்படுபவர்களும் இல்லை. அன்பு, பாசம் என்ற வரையறையை தாண்டினால்தான் தலைவர்கள் உருவாவார்கள்... எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை என்பது மனிதர்களை நேசிப்பதுதான். போராடுகிற துணிவு உள்ளவரை சுற்றி மக்கள் ஒன்று சேர்வார்கள்.

 ஈழ மக்கள்

ஈழ மக்கள்

எந்த இடத்தில் உரிமைக்கான குரல் எழுகிறதோ, அங்குதான் ஒருங்கிணைப்பு என்பது உருவாகிறது... எனக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.. நான் சென்னை வந்தபோது எனக்கு எந்த லட்சியமும் கிடையாது.. நான் கல்லூரியில் படிக்கும்போதுகூட, எப்பவுமே தனியாக தான் இருப்பேன்... எப்போது ஈழத்தில் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதைப்பார்த்துதான் எனக்கு அந்த உணர்வு வந்தது... இதற்கு பிறகு, மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டேன்.

 மனிதநேயம்

மனிதநேயம்

எனவே, மனிதநேயம்தான் ஒரு தலைவனுக்கான மிகப்பெரிய தகுதி... தலைவர்களை உருவாக்குகிற துறை சமூகப்பணித்துறை தான். எனக்கு அப்போது இந்த துறை கிடைக்கவில்லையே என்று உங்களை எல்லாம் பார்த்து பொறாமைப்படுகிறேன்... படிப்பு என்பது வேறு, மக்களிடம் நெருங்குகிறபோது, அங்கு கிடைக்கிற அனுபவமும் என்பது வேறு.. மக்களுக்கு அரசியல், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் உண்மையான சமூக தொண்டு...

Recommended Video

    Arputhammal சொன்ன தகவல் | Perarivalan-Thirumavalavan Meeting | Perarivalan Release | #TamilNadu
     பௌத்தம் என்பது என்ன?

    பௌத்தம் என்பது என்ன?

    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதுதான் பௌத்தம்.. இங்கு சமூக அடிப்படையில் மட்டும் பிளவு கிடையாது. சாதீய அடக்கு முறையில் பிளவு உள்ளது... இந்த பாகுபாடு கூடாது என்பதை எதிர்த்து தான் நாம் போராடி வருகிறோம்... ஓட்டுப்போடக்கூடிய ஒவ்வொருவரும் அரசின், அரசியலின் அங்கம்தான். சோறு ஆக்கி கொடுப்பதோ, துணிமணி கொடுப்பதோ சமூக சேவை அல்ல... அரசியலமைப்பு என்பது இந்தியாவை கட்டமைப்பது தான்" என்று திருமாவளவன் பேசினார்.

    English summary
    thirumavalavan explains about Political Structure, Buddhism in chennai meeting திருமாவளவன் கல்லூரி மாணவர்களிடம் நிகழ்த்திய உரை வைரலாகி வருகிறது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X