சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் : திருமாவளவன்
சென்னை : சேகுவேரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்து இருப்பார், சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்திருப்பார், ஈழ விடுதலையை ஆதரித்துக் குரல் கொடுத்திருப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா சென்னை வந்துள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார் எனப் பேசியுள்ளார்.

சேகுவேரா மகள், பேத்தி
கியூபாவைச் சேர்ந்த புரட்சியாளர் மறைந்த சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அலெய்டா குவேரோ தனது மகள் எஸ்டெஃபானியுடன் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை வந்த அலெய்டா குவேராவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக க்யூபா ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது.

திருமாவளவன் பேச்சு
இந்தக் கூட்டத்தில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், "எண்ணமெல்லாம் புரட்சி என்று சிந்திக்கும் வரம்பு கடந்த சிந்தனையாளர்தான் சேகுவேரா. இனம், மதம், மொழி கடந்து இளம் தலைமுறையினர், புரட்சிகர சக்திகளால், இடதுசாரி அமைப்புகளால் நேசிக்கப்படுபவர் அவர். அவர் மகள் இங்கு வந்திருப்பது அவரே வந்தது போல உள்ளது. என் நாட்டுக்கு மட்டும் போராடுவேன் என்று சேகுவேரா நினைத்து இருந்தால் இங்கு அவரைப் பற்றி பேசி கொண்டு இருக்க மாட்டோம்.

வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்திருப்பார்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சராசரி மருத்துவனாக என் வாழ்வை முடித்துக் கொள்ள மாட்டேன் என்று சிந்தித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கியூபா மக்களுக்கு என்றும் துணை நிற்கும். சேகுவேரா இன்று இருந்திருந்தால் ஈழ விடுதலையை ஆதரித்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் வேங்கை வயலில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்திருப்பார். சேகுவேரா இன்று இருந்திருந்தால் சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு
சேகுவேராவின் மகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். சேவின் அதே சிந்தனையை உள்வாங்கி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் செயல்பட்டு வருகிறார் அலெய்டா. ஆதிக்கம் ஒடுக்குமுறை எங்கு இருந்தாலும் ஏகாதிபத்தியம் தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையும் ஏகாதிபத்தியம் தான் அதனை எதிர்த்து போராடுவதும் ஏகாதிபத்திய புரட்சி தான்" எனப் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications