சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குறி" பார்த்து அடித்த விசிக.. நெல்லிக்குப்பம் சீக்ரெட்.. "கேட்டும் கிடைக்கல".. திருமாவளவன் ஓபன்டாக்

திருமாவளவன் கடலூர் துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் ஒரே ஒரு மேயர் பதவி கேட்டோம்.. ஆனால் கிடைக்கவில்லை.. மேயர் பதவி எதுவும் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சிதான்.. ஆனால், கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன், சென்னை மேயர் மற்றும் 8 என்று முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே கோரிக்கை வைத்திருந்தார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து..இந்தியாவில் பணியாற்ற தகுதி தேர்வு எழுதுவோர் 3 மடங்கு அதிகரிப்பு!வெளிநாடுகளில் மருத்துவம் படித்து..இந்தியாவில் பணியாற்ற தகுதி தேர்வு எழுதுவோர் 3 மடங்கு அதிகரிப்பு!

இதற்காக வெற்றி பெற்றவர்களின் பெயர் உட்பட அனைத்தையும் லிஸ்ட் போட்டு முதல்வர் ஸ்டாலினிடம் தந்திருந்தார்.

கோரிக்கை

கோரிக்கை

நேற்று முன்தினம்கூட திமுக கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாமன்ற உறுப்பினர் பதவி வழங்குவது குறித்த பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடந்தது.. இதில், 21 மேயர் பதவிகளும் திமுகவுக்குத்தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக தெரிகிறது.. இதற்கு பிறகுதான் திருமாவளவன் நேரடியாகவே அறிவாலயத்துக்கு சென்றுள்ளார்.. திமுக குழுவினரை சந்தித்துப் பேசியிருக்கிறார்..

 திமுக கோட்பாடு

திமுக கோட்பாடு

எஸ்.சி., பிரிவினருக்கான ஒதுக்கீட்டில், விசிகவுக்கு மேயர் பதவி தருமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "விசிக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எங்களுக்கு சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளோம்... திமுகவின் கோட்பாடுகளுக்கு இணங்க நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்க பெற்றுள்ளது... அதனால், விரைவில் முதல்வர் தலைமையில் அறிவிப்புகள் வெளியாகும்" என்றார்..

 துணை மேயர் பதவி

துணை மேயர் பதவி

ஏற்கனவே திருமாவளவன் ஒரு மேயர் பதவி, 9 துணை மேயர் பதவிகள் கேட்டிருந்த நிலையில், திருமாவளவன் இப்படி தெரிவித்திருந்தது திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை மேயர் பதவியும் உறுதி செய்யப்பட்டுள்ளதா? அல்லது 9 துணை மேயர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதா? என்று தெரியாமல் குழம்பிய நிலையில், விசிகவுக்கு மட்டுமல்ல, யாருக்குமே மேயர் பதவி தரப்படவில்லை.. திமுக கூட்டணியில் விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இதே நெல்லிக்குப்பத்தில்தான், அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே விசிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது நினைவிருக்கலாம். இதையடுத்து விசிக வேட்பாளர்களை அறிவித்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்.. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் சொன்னதாவது:

கடலூர்

கடலூர்

"கடலூர் மாநகராட்சி மேயர் பதவியையும் சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவியையும் கேட்டோம்.. ஆனால் கிடைக்கவில்லை.. மேயர் பதவி எதுவும் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சிதான்.. ஆனால், கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். 9 துணை மேயர் கேட்டோம்.. லிஸ்ட்டும் தந்தோம்.. தாம்பரத்தில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை.. எனினும் கடலூர் துணை மேயர் தந்திருக்கிறார்கள்.. அதற்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

English summary
Thirumavalvan says about the post of deputy mayor of cuddalore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X