மாரிதாஸ் மீது மேலும் ஒரு புகார்.. ஆபத்தானவர் என எச்சரிக்கும் திருமுருகன் காந்தி
சென்னை: யூடியுபர் மாரிதாஸ் போன்றவர்களை பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட கட்சிகள் இயங்குகின்றன எனவும், தவறான தகவல்களை பரப்பி வரும் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ். இவரை குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துள்ள நிலையில், மற்றொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தவறான தகவல்களை பரப்பி வரும் அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.

யூடியூபர் மாரிதாஸ்
புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி, தமிழகத்தில் உள்ள சமூக செயற்பாட்டாளளை சமூக விரோதிகளாக சித்தரித்து யூட்யூபில் மாரிதாஸ் பதிவிட்டு வருவதாகவும்,யூடிபர் மாரிதாஸ் போன்றவர்களை பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட கட்சிகள் இயங்குகின்றன எனவும், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தி வரும் திராவிட கட்சிகளை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தியும், இல்லாத ஒரு தீவிரவாத கட்டமைப்பை உருவாக்கி வருவது போல் பேசி வருகிறார் என குற்றம் சாட்டினார்.

உண்மைக்கு புறம்பாக மாரிதாஸ்
சமூக செயற்பாட்டாளர்கள் மீது கொச்சையான பிம்பத்தை ஏற்படுத்தும் வேலையை மாரிதாஸ் செய்து வருவதாகவும், ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டு வருகிறார் எனக் கூறிய திருமுருகன் காந்தி, பொய்யான தகவலை பரப்பிவிட்டு வங்கி கணக்குகளை தனது வலைதளத்தில் பதிவிடுகிறார் மாரிதாஸ் என்றார்.

வதந்தி பரப்புகிறார்
உண்மையை பேசாதாவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல, உண்மையான தகவல்களை வைத்து அதனை தெரிவிக்க முடியாதவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு உரிமை கோரலாம் எனக்கூறிய அவர், பொய்யான தகவல்களை, வதந்திகளை பரப்பும் மாரிதாஸ் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்றவர்களை யாரும் ஆதரிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்

அதிமுக ஆட்சி
மாரிதாஸ் போன்றவர்கள் தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என குற்றம் சாட்டிய திருமுருகன்காந்தி, கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சியது எனவும், அதனால் தான் தற்போது புகார் அளித்துள்ளோம் என்றார். மேலும் மாரிதாசின் சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை கொண்டு அவதூறு பரப்பும் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்களையும் காவல்துறையினர் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திருமுருகன் கூறினார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications