சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆமா, கமல்ஹாசன் என்னதான் சொல்றாரு.. பத்திரிகையாளர்களையே தலையை பிய்க்க வைத்த ஒரு பதிலை பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    தேவர் மகன் - 2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படம்- கமல்- வீடியோ

    சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுள்ள பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அளித்த பதிலை கேட்டு பத்திரிகையாளர்கள் இன்னும் குழம்பியபடி உள்ளனர்.

    சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசனிடம் நிருபர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

    அப்போது கிளம்பிச் செல்லவிருந்தபோது, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரி, போராட்டங்கள் வலுத்து வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    என்னதான் சொல்றீங்க

    என்னதான் சொல்றீங்க

    அதற்கு, கமல்ஹாசன் அளித்த பதிலை பாருங்கள்: எத்தனையோ ஐயப்பன் கோயில்கள் உள்ளன. இங்கும் உள்ளன. அங்கே பெண்கள் போகலாமே என்றார். இதை கேட்டு திணுக்குற்ற ஒரு பத்திரிகையாளர், அப்படியானால், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல கூடாது என்று சொல்கிறீர்களா என்று பதில் கேள்வி எழுப்பினார்.

    நோ கமெண்ட்ஸ் இல்லை ஆனால் நோ கமெண்ட்ஸ்

    நோ கமெண்ட்ஸ் இல்லை ஆனால் நோ கமெண்ட்ஸ்

    இதற்கு கமல்ஹாசன் அளித்த பதில் இன்னும் செம. அவர் கூறியதை பாருங்கள்: இது உச்சநீதிமன்றம் மற்றும் பக்தர்கள் நடுவேயான விஷயம். நான் சபரிமலை சென்றது இல்லை. நான் கேள்விப்பட்டதுதான் இது. நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு உள்ளேன், அவ்வளவுதான். நான் இந்த விஷயத்தில் கமெண்ட் செய்யப்போவதில்லை. அவ்வளவு ஏன், நான் நோ கமெண்ட்ஸ் என்று கூட இதற்கு சொல்லப்போவதில்லை. இப்படி ஒரு பதிலை சொன்னார் கமல்ஹாசன்.

    இன்னிக்கு ரொம்ப ஜாம் ஆகுதே

    இன்னிக்கு ரொம்ப ஜாம் ஆகுதே

    இதை கேட்டு தலை சுற்றிய நிலையில், இதற்கு அவர் "நோ கமெண்ட்ஸ்" என்று ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால், எல்லோருடைய காலநேரமும் மிச்சமாகியிருக்கும். வீடியோ மெமரியும் வேஸ்ட் ஆகியிருக்காதே" என்று கமெண்ட்ஸ் அடிங்க, பத்திரிகையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

    என்ன நிலைப்பாடு

    கமல்ஹாசனின் இந்த பேட்டி மூலமாக, சபரிமலை விவகாரத்தில், கமல் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்திலிருந்து விலகி இருக்கவே கமல்ஹாசன் விரும்புகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

    English summary
    This is a matter between the Supreme Court and the devotees. I am just an onlooker. I am not going to comment on it. I am not even going to say 'no comments', says Kamal Haasan, Makkal Needhi Maiam on Sabarimala Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X