ஓபிஎஸ் முதல்வரான அதிசயம்.. திருப்பங்கள் நிறைந்த 2001 தேர்தல்.. ஜெயலலிதா நிகழ்த்திய மேஜிக்!
சென்னை: 1996-ல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அடுத்த ஐந்து வருடங்களில் அதாவது 2001ல் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம், தமாகா, பாமக மற்றும் இடதுசாரிகளுடன் ஜெயலலிதா அமைத்த வலுவான கூட்டணி தான். திமுக மோசமாக தோற்க இன்னொரு காரணம்.. தனித்து போட்டியிட்டு வைகோ பிரித்த ஐந்து சதவீத வாக்குகள்.
1996ல் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்து பலர் மீதும் திமுக அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவும் ஊராட்சிகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் ஜெயலலிதா தண்டைக்கு உள்ளாக காரணமாக இருந்த வழக்கு என்றால் 1996ல் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்குதான். அந்த வழக்கில் திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகனும் இணைந்தார். இதுதான் பின்னாளில் ஜெயலலிதாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. சென்னை: 1996-ல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அடுத்த ஐந்து வருடங்களில் அதாவது 2001ல் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதற்கு முக்கிய காரணம், தமாகா, பாமக மற்றும் இடதுசாரிகளுடன் ஜெயலலிதா அமைத்த வலுவான கூட்டணி தான். திமுக மோசமாக தோற்க இன்னொரு காரணம்.. தனித்து போட்டியிட்டு வைகோ பிரித்த ஐந்து சதவீத வாக்குகள்.
1996ல் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்து பலர் மீதும் திமுக அரசு பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவும் ஊராட்சிகளுக்கு வண்ணத்தொலைக்காட்சி வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் ஜெயலலிதா தண்டைக்கு உள்ளாக காரணமாக இருந்த வழக்கு என்றால் 1996ல் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்குதான். அந்த வழக்கில் திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகனும் இணைந்தார். இதுதான் பின்னாளில் ஜெயலலிதாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணி
சரி விஷயத்திற்கு வரும் 1996ல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று பிரிந்து சென்ற ஜிகே மூப்பனாரின் தமாகா அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதுதான். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் அந்த கூட்டணியில் இடம் பெற்றது. இதுதவிர பாமக, இடதுசாரிகளும் இந்த கூட்டணியில் இணைந்தனர். இப்படி வலுவான கூட்டணி அமைத்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக களம் கண்டது.

மதிமுக தனித்து போட்டி
ஆனால் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, சு. திருநாவுக்கரசரின் எம்ஜியார் அதிமுக, ராஜ கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம் , ஏ. சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி , திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன. வைகோவின் மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது.

வேட்பு மனுக்கள் தள்ளுபடி
ஜெயலலிதா ஒரு பக்கம் வலுவான கூட்டணி அமைத்திருந்தாலும். மறுபக்கம் அவருக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டுகளும், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே வழக்கில் 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இதனிடையேமக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரு தொகுதிகளில் மட்டுமே ஒருவர் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்ற விதிமுறையை மீறி, நான்கு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்ததன் அடிப்படையில் புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிபட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா சார்பில் தாக்கலான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதிமுக வெற்றி
அதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாத நிலை ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக வென்றால் யார் முதல்வர் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தீவிர பிரசாரத்தில் ஜெயலலிதா இறங்கினார். 2001ம் ஆண்டு மே 10ம் தேதி தேர்தலின் முடிவுகள் வெளியானது அதிமுக 132 இடங்களில் வென்றிருந்தது. அந்த அணி 196 இடங்களை வென்றது.. திமுக பாஜக கூட்டணி 37 இடங்களில் மட்டுமே வென்றது. மதிமுக 5.4 சதவீதம் வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தது.

பதவியும் ஏற்றார்
இதையடுத்து அதிமுக எம்எல்ஏ-க்கள் கூடி ஜெயலலிதாவை சட்டமன்ற குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அதே வேகத்தில் ஆளுநர் பாத்திமா பீவியை சந்தித்து எம்எல்ஏ-களின் ஆதரவுக் கடிதத்தை ஜெயலலிதா கொடுத்தார். வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நபர், முதல்வராக பதவியேற்பதா என புருவங்கள் உயர்ந்தன. ஆனால் பலரும் எதிர்பாராத வகையில் பாத்திமா பீவி, ஜெயலிதாவை பதவியேற்க அழைத்தார். ஜெயலலிதா முதல்வராக பதவியும் ஏற்றார்.

மீண்டும் முதல்வரான ஜெயலலிதா
ஜெயலலிதா பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என தீர்ப்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவி விலகினார். இந்த ட்விஸ்ட்களுக்கு மத்தியில் புதிய ட்விஸ்ட்டாக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் அமர வைத்தார் ஜெயலலிதா. எனினும் அடுத்த சில மாதங்களில் வழக்குகளில் இருந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 2002ல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு அபாரமாக வென்று முதல்வராக 2006 வரை பதவி வகித்தார்.