இப்படி நடந்திருக்க கூடாது.. கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 சம்பவங்கள்.. ரசிகர்கள் சோகம்!
சென்னை: இன்று கிரிக்கெட் உலகில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இரண்டு விஷயமே கிரிக்கெட் உலகிற்கு ஒருவகையில் பின்னடைவை கொடுக்கும் செய்தியாகும்.
Recommended Video
ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் கடந்த சில வருடங்களாகவே சர்ச்சை மேல் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் உப்புதாள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை பெற்றனர்.
அதேபோல் இவர்களின் கேப்டன், துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இவர்களுக்கு இனி கேப்டன்சி வழங்கப்படாது என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் கண்டிப்புடன் அறிவித்தது.

கண்டிப்பு
அதன்பின்தான் ஆரோன் பின் வெள்ளை பால் அணியின் கேப்டனாகவும், டிம் பெயின் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் டிம் பெயின் டெஸ்ட் கேப்டனாக அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. இந்தியாவிடம் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை இழந்ததோடு, காப்பாவிலும் தோல்வி அடைந்து மிக மோசமாக விமர்சனங்களுக்கு உள்ளானார்.

விமர்சனம்
இந்த நிலையில்தான் 2017ல் இவர் ஆஸ்திரேலிய போர்டில் இருக்கும் பெண் ஒருவருடன் பாலியல் ரீதியாக பேசியது சர்ச்சையாகி உள்ளது. அந்த பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்களை அழைத்ததாகவும், அவரை படுக்கைக்கு அழைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக 2017லேயே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் சென்று உள்ளது. இதை பற்றி விசாரணையும் நடந்துள்ளது.

கசிந்தது
இதில் டிம் பெயின் விதிமுறை எதையும் மாறியதாக தெரியாத காரணத்தால் அவர் மீது நடடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அதே சமயம் தற்போது இந்த பாலியல் ரீதியான சாட்கள் சில இணையத்தில் கசிந்து உள்ளன. இன்னும் சில சாட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மரியாதை கருதி ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில் இருந்து டிம் பெயின் நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்
இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகை பெரிய அளவில் உலுக்கி உள்ளது. ஒரு பக்கம் இந்த சம்பவம் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வேதனையில் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் டி 20 நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து உள்ளார். ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியில் இருந்து இவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

லீக்
அதன்பின் லீக் ஆட்டங்களில் உலகம் முழுக்க ஆடி வந்தார். ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்காக ஆடி வந்தார். இந்த நிலையில்தான் அவர் அதில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஏபிடி வில்லியர்ஸ் கடைசி வரை ஐபிஎல்லில் கோப்பை வெல்லவில்லை. தென்னாப்பிரிக்க அணியிலும் கோப்பை வெல்லவில்லை.

கோப்பை இல்லை
இவ்வளவு சிறப்பான வீரர் பெரிய கோப்பை எதையும் வெல்லாமல் ஓய்வை அறிவிப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏபிடி வில்லியர்ஸுக்கு இந்தியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications