சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் 27 அரசியல் படுகொலைகள்.. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்... பி.எப்.ஐ. இயக்கத்தின் பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசால் சட்டவிரோத இயக்கமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா பிரகடனப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

1990களுக்கு பிந்தைய அரசியல் சூழ்நிலைகளால் உருவானது பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரை, பாபர் மசூதி இடிப்பு ஆகிய சூழ்நிலைகள் பிஎப்ஐ இயக்கம் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது.

Timeline of Banned Islamic outfit Popular Front of India

பிஎப்ஐ அமைப்பு தொடர்பான சில தகவல்கள்:

1992: கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் சேவா சங்கம்) என்ற இயக்கத்தை முஸ்லிம்கள் உருவாக்கினர். பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்ததால் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

1992: National Development Front (NDF)- தேசிய வளர்ச்சி முன்னணி என்ற இஸ்லாமிய அமைப்பு உருவானது

1993: தேசிய வளர்ச்சி முன்னணி உருவாக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

1997: கேரளாவில் பிரம்மாண்டமான மனித உரிமை மாநாடு நடத்தப்பட்டது

2007: பெங்களூருவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு உருவாக்கம் - என்.டி.எப், தமிழகத்தின் மனித நீதி பாசறை, கர்நாடகாவின் கேஎஃப்டி ஆகியவை இணைந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவை உருவாக்கின.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை-சட்டவிரோத இயக்கமாக அறிவித்தது மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை-சட்டவிரோத இயக்கமாக அறிவித்தது மத்திய அரசு

2009: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ (SDPI) உதயமானது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ. என்ற மனித உரிமை இயக்கத்திலும் பி.எப்.ஐ. நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டனர். 2013, 2018 தேர்தல்களில் கர்நாடகாவிலும் 2016-ல் தமிழகத்திலும் எஸ்டிபிஐ போட்டியிட்டது.

2012: கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு கோரி நாடாளுமன்றம் நோக்கி பிரம்மாண்ட பேரணியை நடத்தியது
பிஎப்ஐ

2014: கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிஎப்ஐ, 27 அரசியல் படுகொலைகள்- 86 கொலை முயற்சிகள், 125 மத மோதல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது

2019: நாடு முழுவதும் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் பிஎப்ஐ இருந்ததாக கூறப்பட்டது.

2019: தமிழகத்தில் மதமாற்றத்தை தடுத்ததால் பிஎப்ஐ அமைப்பினார் பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்

2019: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டது.

2020: ஆப்கானிஸ்தானில் குருத்வாரா மீதான தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி கேரளாவை சேர்ந்தவர், பிஎப்ஐ இயக்கத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகின.

2022 மே: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

2022 செப்டம்பர்: நாடு முழுவதும் பிஎப்ஐ இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சோதனை; 300க்கும் மேற்பட்டோர் கைது

2022 செப்டம்பர் 28: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என அறிவித்து 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு. பாப்புலர் ஃபிரண்ட் இந்தியாவின் 8 முன்னணி அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.

English summary
A Timeline of Banned Islamic outfit Popular Front of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X