10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று; ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - அரசு அறிவிப்பு
ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான, அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாததால் இந்த தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 - 2020ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மதிப்பெண்களுடன் கிடைத்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முழு ஆண்டிலும் கிடைத்தது. அதே நேரத்தில் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் பாடங்களை படிக்காமல் தேர்வும் எழுதாமல் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் தேர்ச்சி என்று மட்டுமே போட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது.
பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாத காரணத்தால் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் இருந்து 50 சதவிகித மதிப்பெண்களும், +1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவிகிதமும், +2 செய்முறை தேர்வில் 30 சதவிகிதம் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை மாதம் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண்ணில் திருப்தி ஏற்படாத மாணவர்கள் சிலர் விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் இந்த சான்றிதழ்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிறந்த தேதி மற்றும் மாணவர்களின் பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications