திமுகவின் சோ கால்ட் ஏ.டி.எம்.களுக்கு டெல்லியின் அதிரடி லாக்டவுன்.. கிலியில் கல்வி தந்தைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் கொரோனா துயரங்கள் தொடர்ந்தாலும் அரசியல் நடவடிக்கைகளை டெல்லி படுதீவிரமாகவே மேற்கொண்டு வருகிறது. திமுகவின் நிதி ஆதாரங்களாக இருக்கும் கல்வி தந்தைகளை சட்டங்களை கையில் வைத்துக் கொண்டு கவனிப்பதில் டெல்லி தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கொரோனாவை முன்வைத்து சட்டசபை தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் பணிகள் மும்முரம்

தேர்தல் பணிகள் மும்முரம்

இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் அனைத்தும் சட்டசபை தேர்தலுக்கான களப் பணிகளை சைலண்ட்டாக முடுக்கியும் விட்டு வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரையில் கொரோனா நலத் திட்டங்களையே வாக்கு வங்கியாக அறுவடை செய்யலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறது.

சென்னை அதிமுக வியூகம்

சென்னை அதிமுக வியூகம்

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மைக்ரோ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டையும் கவனிக்கும் விதம் அதிமுகவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவும் ஒன்றிணைவோம் வா உள்ளிட்டவை தங்களுக்கு கை கொடுக்கும் என கணக்குப் போட்டு வைத்திருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் கல்வி தந்தைகளின் மீதான புதைந்து கிடந்த புகார்களை டெல்லி கையில் எடுத்திருக்கிறதாம்.

கல்வி தந்தைகளிடம் விசாரணை

கல்வி தந்தைகளிடம் விசாரணை

இதனை வைத்துக் கண்டு இந்த கல்வி தந்தைகளை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது டெல்லி. இப்படி கல்வி தந்தைகளுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுகவுக்கான நிதி பட்டுவாடாவை கட்டுப்படுத்திவிடலாம் என்பது டெல்லியின் கணக்கு.

திமுக தலைமை ஆலோசனை

திமுக தலைமை ஆலோசனை

அதேநேரத்தில் கரைவேட்டி கல்வி தந்தைகளுக்கும் கூட உள்ளூர ஒரு மகிழ்ச்சிதானாம். வழக்கு விசாரணை இதனை காரணம் காட்டி தலைமைக்கு நிதி சப்ளை செய்வதில் இருந்து தப்பிவிடலாம் என்பது அவர்களது திட்டமாம். திமுகவைப் பொறுத்தவரை வைட்டமின் ப வை பெருமளவு மலையளவு நம்பி இருக்கிறது. அதனால் டெல்லி வைக்கும் வேட்டுகளை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் தீவிரமாக இருக்கிறதாம் திமுக தலைமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+