சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக மீது "டெல்லி"க்கு பறக்கும் புகார்.. மெகா புள்ளிகளை இறக்கிய பாஜக.. அனலடிக்கும் தேர்தல் களம்

பலமான வேட்பாளர்களை திமுகவுக்கு எதிராக பாஜக நிறுத்துகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த முறை பாஜகவின் பிரச்சாரங்கள் திமுகவை எதிர்நோக்கியே உள்ளன.. திமுக அரசு மீதான குறைகள், குற்றச்சாட்டுகள், புகார்கள், விமர்சனங்கள், என பாஜக கையில் எடுத்துள்ள வியூகம் அந்த கட்சிக்கு எந்த அளவுக்கு பலன் தர போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முன்பைவிட சமீபகாலமாக பாஜகவின் எழுச்சி தமிழகத்தில் இல்லாமல் இல்லை.. பரவலாக ஆங்காங்கே கட்சிக்கான பலம் லேசாக கூடி வந்து கொண்டுதானிருக்கிறது.

நீங்க எப்போ எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் எனத் தெரியும்! அதிமுக-பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்!நீங்க எப்போ எப்படி டிசைன் டிசைனாக நடிப்பீர்கள் எனத் தெரியும்! அதிமுக-பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

அதேசமயம் எந்த காலத்திலும் இல்லாமல், இந்த முறை 4 சீட் வெற்றி பெற்றதில் இருந்தே, ஏகப்பட்ட பிரச்சனைகளும் அக்கட்சியை சூழ்ந்து கொண்டிருக்கின்றன..

 தனித்து போட்டி

தனித்து போட்டி

முன்பெல்லாம் எதிர்க்கட்சியிடம் மட்டும் முட்டல் - மோதல் இருக்கும்.. இப்போது சொந்த கூட்டணிக்குள்ளேயே ஈகோ வெடித்துள்ளது.. அதன் விளைவு தனித்து போட்டியிடும் சூழலை எதிர்கொண்டுள்ளது.. எனினும், திமுக அரசு ஒன்றையே பாஜக டார்கெட் செய்து களமிறங்கி உள்ளது.. குறிப்பாக, திமுகவை டேமேஜ் செய்து, அதன்மூலம் வாக்குகளை அள்ள பிளான் செய்து வருகிறது.

 பரிசு தொகுப்பு

பரிசு தொகுப்பு

மழை நிவாரணம் வழங்காதது, நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமில்லாத பொருட்களை தந்தது என திமுக அரசு மீது மக்களுக்கு லேசான அதிருப்தி திருப்தி உள்ளது.. இந்த அதிருப்தியைதான் பாஜக தனக்கு சாதகமாக வாக்குகளாக அறுவடை செய்து கொள்ள பார்க்கிறது.. இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக கொண்டு செல்வதைவிட, நாமே மக்களிடம் கொண்டு சென்றால் அது கூடுதல் பலன் தரும் என்று அதிமுக நம்புகிறது.. அதைவிட முக்கியம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்துவிட்டால், அதிக இடங்களில் பாஜகவால் ஜெயிக்க முடியும் என்றும் அக்கட்சி கணக்கு போடுகிறது.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

அதனால்தான், எங்கெல்லாம் தங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் உள்ள இடங்களோ, அங்கெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிராக, பலமான வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து பாஜக களம் இறங்கி உள்ளதாம்.. இப்படி தேர்தல் பரபரப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், திமுகவை முந்த முடியாமல் பாஜக திணறவும் செய்கிறதாம்.. திமுகவை குறை சொன்னாலும், தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினாலும், அதிகப்படியான இடங்களை வெல்ல இது போதுமான உக்தியாக இருக்குமா என்பதுதான் அக்கட்சிக்கு குழப்பமாக உள்ளதாம்.

 புகார்கள்

புகார்கள்

போதாக்குறைக்கு நீட் விவகாரத்தில் இன்னொரு தீர்மானத்தை போட்டு, பாஜகவுக்கே ஷாக் தந்துள்ளது திமுக அரசு.. மற்றொருபக்கம், கட்சி தலைமை அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வந்து விழுந்துள்ளது மேலும் அதிர்ச்சியை கூட்டி உள்ளது.. இப்படியே விட்டால், தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆதரவும் குறைந்துவிடும் என்பதால், திமுகமீதான புகார்கள் என்னவெல்லாம் உள்ளதென்று தேடி, அதை மேலிடத்துக்கு அனுப்பவும் அக்கட்சி தயாராகி வருகிறதாம்..!

English summary
TN BJPs new Strategy in Rural Local body election with Strong Candidates
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X