6.35 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்
சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.
Recommended Video
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. ஏனெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வருவதால் அவர்களிடம் மிதிவண்டி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்த இலவச மிதிவண்டித் திட்டம் முக்கிய பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இந்த திட்டம் உயர்நிலைக் கல்வி படிக்கும் எஸ்.சி, எஸ் டி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இது மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் 11ம் வகுப்பு அனைத்து பயிலும் மாணவர்களுக்கும், ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இதனை பெறுபவர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
மேலும் மாணவர்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். . அதன்படி 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவரை, பச்சை வண்ணத்தில் வழங்கப்பட்ட சைக்கிள் இந்தாண்டு நீல வண்ணத்தில் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள , நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ. 323.03 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 10 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஒரு மாதத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 6.35 லட்சம் பேருக்கு சைக்கிள் தர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications