முதல்வர் அச்சுறுத்தும் விதமாக பேசுகிறார்.. இப்படி கோபப்பட்டு பார்த்ததே இல்லை.. அண்ணாமலை அட்டாக்
சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் தான் அச்சுறுத்தும் விதமாக பேசுவதாகவும் , அவரது சகோதரி கனிமொழி கைதுக்கு கூட இந்த அளவுக்கு கோபப்பட்டு நான் பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலை உலுக்கியுள்ளது. கடந்த இரு தினங்களாக தமிழக அரசியலில் அனலை ஏற்படுத்தி செந்தில் பாலாஜி கைது விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலிலேயே காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை! பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
இந்தப் பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லை தி.மு.க.காரர்கள்! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்" என மிகவும் காட்டமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் கூறினார். அவர் பேசியதாவது:- முதல்வர் என்ற வரம்பை மீறி மு.க ஸ்டாலின் பேசியிருக்கிறார். குறிப்பாக செந்தில் பாலாஜி மீதான வழக்கு 2014 லேயே போடப்பட்ட வழக்கு என்று அனைவருக்கும் தெரியும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு வழக்கு இது. அமலாக்கத்துறை இதற்கு முன்பாக எடுத்த நடவடிக்கைக்கு கூட உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கி வைத்து இருந்தார்கள்.
அந்த தடை விலக்கப்பட்டுள்ளதால் தற்போது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது சகோதரி கனிமொழி கைதுக்கு கூட இந்த அளவுக்கு கோபப்பட்டு நான் பார்க்கவில்லை. செந்தில் பாலாஜி கைதுக்கு இந்த அளவு கோபப்படுகிறார் என்றால் பொதுமக்கள் நினைப்பது சரிதான்.. திமுகவின் கருவூலமே செந்தில் பாலாஜிதான் என்று பொதுமக்கள் பேசுவது முதல்வரின் இன்றைய பேச்சு மூலம் ஊர்ஜிதமாகிறது. முதல்வர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு முதல்வரின் நடவடிக்கை என்பது முதல்வர் நடந்து கொள்ளும் விதத்தை போல இல்லை. முதல்வர் தான் அச்சுறுத்தும் விதமாக பேசுகிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வருமான வரித்துறை, அமலாகக்த்துறை நேர்மையாகத்தான் செயல்படுகிறது. முதல்வரின் பேச்சுத்தான் நேர்மையானதாக இல்லை. சிபிஐக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பொது அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications