சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில்.. ஒரு நாளுக்கு சராசரியாக 100 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

தமிழகத்தில் குழந்தைகள் அதிக அளவுக்கு தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொற்று குறைந்தாலும், குழந்தைகளை கொரோனா வைரஸ் பாதிப்பது மட்டும் குறையவே இல்லையாம்.. ஒருநாளைக்கு சராசரியாக 100 குழந்தைகளாகவது தொற்றுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதல் அலையைவிட இரண்டாவது அலை படுவீரியமாக இருந்தது.. இதனால் பாதிப்புகளும் அதிகம், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது.

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்

இதற்கு காரணம், வயது வித்தியாசம் பாராமல் அனைத்து தரப்பினரையுமே இந்த தொற்று பாதிப்பை தந்துவிட்டது.. இதில் குழந்தைகளும் விலக்கல்ல.

 குழந்தைகள்

குழந்தைகள்

அந்த வகையில், சமீப காலமாக குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது.. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த அலையில் இருந்த அளவுக்கு, இன்னும் குறையவில்லை என்று தெரிவிக்கிறது.

 தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

அதாவது கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போது, இதே ஜூலை மாதத்தில் 7, 826 குழந்தைகள் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.. ஆனால் 2வது அலையில் அதை விட 4 மடங்கு பாதிப்பு அதிகமாகிவிட்டதாம்.. மே மாதத்தில் மட்டும் 33,243 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனராம்.. ஜூன் மாதத்தில் 14,538 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த வருட ஜூலை மாதத்தில், நடந்து முடிந்த 25 நாட்களில் 3,367 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது...

எண்ணிக்கை

எண்ணிக்கை

அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 100 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு உண்டாகிவிடுவதாக சொல்கிறார்கள்.. கடந்த வருடம் ஜூலையில் 7,826 குழந்தைகளும், ஆகஸ்ட் மாதத்தில் 7,485 குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.. இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் இது ஓரளவு குறைந்து, 4022 குழந்தைகள் தொற்றுக்கு ஆளாகினர்... இது படிப்படியாக குறைந்து இந்த வருட பிப்ரவரி வரை 885 எண்ணிக்கை வரை வந்தது.. இதுதான் மிக மிக குறைவான பாதிப்பு எண்ணிக்கையாகும்.

 எண்ணிக்கை

எண்ணிக்கை

இதற்கு பிறகுதான் 2வது அலை உச்சத்துக்கு வந்துவிட்டது.. குழந்தைகளின் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக தொடங்கியது.. மார்ச் மாதத்தில் 1,272 என்று உயர ஆரம்பித்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் 9586-ஆக உயர்ந்தது... இந்த பாதிப்பின் அளவானது, கடந்த பிப்ரவரி மாதத்தை போல இன்னமும் உள்ளது.. 1000-க்கு கீழான அளவுக்கு குறையவேயில்லை.. அதானது, இந்த 2வது அலையின் பாதிப்பு குழந்தைளை அதிக அளவு தாக்கி கொண்டுதான் இருக்கிறதாம்.

English summary
TN Coronavirus Cases and an average of 100 children are newly infected a day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X