சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"5 வருட சிஏஜி".. மொத்தமாக தோண்டி எடுக்கும் பிடிஆர்.. இன்றே சட்டசபையில் வெளியீடு.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 5 சிஏஜி அறிக்கை விவரங்களை வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலை என்ன என்று முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

எவ்வளவு கடன் இருக்கிறது, முந்தைய ஆட்சியில் நிதி எப்படி செலவிடப்பட்டது, முறைகேடுகளின் விவரங்கள், எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்று அனைத்து விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை பிடிஆர் வெளியிட இருக்கிறார்.

அதிரடி.. தமிழகத்தில் பிற மாநில பணியாளர்கள் புகுத்தப்பட்டது எப்படி? 10 வருட ஃபைலை கையிலெடுத்த பிடிஆர்அதிரடி.. தமிழகத்தில் பிற மாநில பணியாளர்கள் புகுத்தப்பட்டது எப்படி? 10 வருட ஃபைலை கையிலெடுத்த பிடிஆர்

என்ன

என்ன

இந்த வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அஸ்திரமாக பார்க்கிறது. நிதி நிலை விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவதன் மூலம் முந்தைய அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்லலாம், அதேபோல் புதிய திட்டங்களை அதற்கு ஏற்றபடி வகுக்கலாம் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. முதல்வருக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பொருளாதார வல்லுநர் குழுவிற்கும் இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும்.

அடுத்த அறிக்கை

அடுத்த அறிக்கை

இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 5 சிஏஜி அறிக்கை விவரங்களை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் செய்த செலவிற்கான தணிக்கை அறிக்கையை இன்று பிடிஆர் வெளியிட இருக்கிறார். மொத்தமாக கடந்த 5 வருட சிஏஜி அறிக்கையை ஒன்றாக இவர் வெளியிட உள்ளார்.

எப்படி

எப்படி

பொதுவாக சிஏஜி அறிக்கை என்பது மத்திய அரசு கொடுக்கும் நிதி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்படும். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியின் செலவினம் குறித்தும் வருடா வருடம் சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டும். மாநில வாரியாக இந்த சிஏஜி அறிக்கை வெளியிடப்படும்.

அரசு

அரசு

இதை அந்தந்த மாநில அரசுகள் பொதுவில் வெளியிடுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான செலவு தணிக்கைக்கான சிஏஜி அறிக்கையை முந்தைய அரசு 5 வருடமாக வெளியிடவில்லை. இதைத்தான் மொத்தமாக இன்று பிடிஆர் வெளியிட இருக்கிறார். இதனால் தமிழ்நாடு அரசின் கடந்த 5 வருட செலவினங்கள் அனைத்தும் இன்று மொத்தமாக வெளியாகும்.

கேள்விகள்

கேள்விகள்

5 வருடமாக சிஏஜி அறிக்கையை வெளியிடாமல் போனது ஏன்? எதற்காக இதை வெளியிடாமல் இருந்தனர் என்ற விவரங்கள் தெரியவில்லை. சிஏஜி அறிக்கை வெளியாகும் முன் அதை பற்றி பொதுவில் பேச கூடாது என்பதால் இன்னும் இதைப்பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இன்று இந்த அறிக்கை முறையாக சட்டசபையில் வெளியிடப்பட்ட பின் பல்வேறு பூதங்கள் கிளம்பும் வாய்ப்புகள் உள்ளன.

English summary
Tamilnadu Finance Minister PTR Palanivel Thiagarajan to release 5 year CAG report on state expenses today in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X