சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மின் இணைப்பு + ஆதார் எண் தடை? டெல்லியில் பரபர மூவ்.. ‘கேவியட்’ மனு தாக்கல் செய்த தமிழக அரசு!

Google Oneindia Tamil News

சென்னை : மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால், தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜிமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு + ஆதார்

மின் இணைப்பு + ஆதார்

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென கடந்த அக்டோபர் 6 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 ஐகோர்ட்டில் வழக்கு

ஐகோர்ட்டில் வழக்கு


இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே சாத்தியம். வாடகை வீட்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபிறகு புதிதாக வாடகைக்கு வருவோர் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் தமிழக அரசு, ஆதார் எண்ணுக்குப் பதிலாக வேறு ஆவணங்களை இணைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லலை எனத் தெரிவித்திருந்தார்.

ரத்து செய்ய வேண்டும்

ரத்து செய்ய வேண்டும்

மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்க சட்ட ரீதியாக எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி வழங்கவேண்டும். ஆதார் இணைப்பின் மூலமாக சமூக நலத்திட்டப் பயன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. அதேபோல மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பு, 'வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகை தாரருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை. மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும். அனைத்து ஒப்புதலையும் பெற்ற பிறகு தான் ஆதார் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது' என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கேவியட் மனு

கேவியட் மனு

இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

English summary
Tamil Nadu government has filed a caveat petition in the Supreme Court regarding linking Aadhaar number with electricity connection. Recently, Chennai High Court dismissed the case seeking ban on linking Aadhaar number with EB connection. TN Govt has filed a caveat petition that if an appeal is filed against this order, no order should be issued without hearing the arguments of tn government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X