கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை 'வாபஸ்' பெறும் தமிழக அரசு.. ஆளுநருக்கு கடிதம்! என்னாச்சு?
சென்னை : கூட்டுறவு சங்க விதிகள் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதாக, தமிழக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. இந்த மசோதாவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதாவை கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
அந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டிருந்த, பதவிக்காலம் தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்டிருந்த நிலையில் தற்போது மசோதாவை திரும்பப் பெறும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் வேறொரு மசோதா தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
கூட்டுறவு சங்க விதிகளை திருத்தம் செய்யும் சட்ட மசோதா கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருப்பதை 3 ஆண்டுகளாக குறைப்பது உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. எனினும், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டு இருந்தார்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
தமிழக ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதால், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்து ஆண்டு காலம் பதவி இருப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசின் சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாபஸ் பெற ஆளுநருக்கு கடிதம்
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறி சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுவதன் மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவே நீடிக்க உள்ளது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் கூடும் தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவு சங்க திருத்தம் தொடர்பாக ஒரு புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

விளக்கம் கேட்ட ஆளுநர்
நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் ஐந்தாண்டுகள் கூட்டுறவு சங்கங்களுடைய பதவி காலமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கூட்டுறவு சங்க பதவிகளின் பதவி காலத்தை ஏன் மூன்றாண்டுகளாக குறைத்தீர்கள் என்று ஆளுநர் தரப்பில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications