Just In
தமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா?
சென்னை: 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 5 மற்றும் 8--ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தமிழக அரசு இதை திட்டவட்டமாக மறுத்தது.

அத்துடன் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் எண்ணம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் மீண்டும் வெளியாகி உள்ளன.
ஆனால் இதனை ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தவில்லை. பத்தாம் வகுப்பில் மொழிப்பாட தாள்களை ஒரே தாளாக மாற்றத்தான் அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.